Dec 1, 2011

மதவாதம் முன்வைக்கும் மக்கள் நலன் என்ன - ஓர் இணைய விவாதம்



இயக்குனர் அமீர் இனிமேல் தமிழர்கள் என்று குரலெழுப்பினால் கோஞ்சம் யோசியுங்க மக்களே !

நீயா? நானா?வை எதிர்த்தது ஏன்? To Watch P Jainulabdeen's Complete Speeches in one Clip Click here http://www.youtube.com/view_play_list?p=F90859FE644EF356 to ...

·         Gee Musthafa Dislike!! dislike!!.. Why can't religious and regional perspective co-exists?
Kumudhini SatheesKaran மக்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ இவர்களைப்போல் உள்ளவர்கள் கூட்டம் கூட்டி கேஸ் போட்டு, ஆர்ப்பாட்டம் பண்ணி மக்களை நினைக்க வைத்து விடுவார்கள். இது இந்து அமைப்புக்களுக்கும் பொருந்தும்.
November 27 at 8:48am · Like
Shaheer Mohammed i dont understand you mr.chella. A hindu can be religious and still be called tamilan and not a muslim.
November 27 at 9:08am · Like ·  5
Sudharshan Subramaniam சிறு வயதில் இருந்தே திணிக்கப்பட்ட மதங்களை விட்டு வெளியே வர வேண்டும் ..இது போன்ற விவாதங்கள் வரும் போது :) மத சாயலில் இருந்து தான் அந்த நபர பேசுகிறார் .
November 27 at 9:44am · Like
இள மல்லன் Osai chella , You are proving that you are cunning and non-sense. I know lot of muslims who loves tamil in deeply. Don't post it like that. I am hindu who respects other religions.
இள மல்லன் There is no connection between Tamil and hindu. Tamil is beyond the religion.
November 27 at 10:00am · Like ·  4
Nirmala Kotravai சுதந்திரம் பேசும் பெண்களை அரைகுறைகள் என்று அவர் சொல்லியிருப்பதற்கு கோபப்படுவதைவிட கவணம் மொழிக்கும் மதத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பிரச்சனைகளை, தேவைகளை பெண்கள்தான் பேசவேண்டும், இதில் முஸ்லிம் என்ன ஹிந்து என்ன..இதுவே ஆணாதிக்க பிரித்தாளும் மனவோட்டம்...அறிஞர்களை வைத்து உரையாடுங்கள் என்று சொல்வதில் ஆண்கள் மட்டுமே அறிஞர்கள் என்று சொல்கிறாரா...சுதந்திரம் பேசுவதற்கும், உரிமைகளை பேசுவதற்கும் அறிஞராக இருக்க வேண்டிய அவசியம் என்ன..உணர்வின் அடிப்படையில் அல்லவா பேசவேண்டும்...மார்கமும், வேதமும் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கட்டும், அதை மாற்றுவது பற்றி பேசும் உரிமை அந்ததந்த மார்க்கத்தினருக்கு இருப்பதுதானே ஜனநாயகம், மாற்று மார்க்கத்தினர் பேசினால், ‘விரோதிஎன்று கலவரம் அளவுக்கு திரித்து விடமாட்டார்களா?

5% பெண்கள், அதுவும் (வேசி குணம் கொண்டவர்கள்தான்) ஊர்சுற்ற நிணைக்கும் பெண்கள் தான் புர்க்கா அணிய மாட்டோம் என்று பேசுவார்கள் என்று இவர் மட்டும் சொல்லவில்லை, பொதுவாக பெண்கள் சுதந்திரம் பேசினால் அவள் வேசி என்று எல்லா மதத் தலைவர்களாலும் குறிக்கப்படுவதால், பெண்கள் இவ்விசயங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவது எப்படி நடக்கும். புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் பல்வேறு சுதந்திரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று...மதங்களைத் தாண்டி பெண் எனும் அடையாளத்தின் அடிப்படையில் எவ்வகை சுதந்திரங்களையும் பொது வெளியில் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். அதையும் பெண்கள் தான் முன்னெடுக்க வேண்டும்...ஆண் போடும் சுதந்திரப் பிச்சைக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை....
November 27 at 10:31am · Like ·  20
Nirmala Kotravai அழுந்த சொல்வதானால் எந்த வேதமும் கடவுளால் எழுதப்படவில்லை...அவரின் பெயரைச் சொல்லி ஆண்களால் எழுதப்பட்டது அவ்வளவுதான்.........கடவுள் என்றொருவன் இருப்பானாயின் அவன் ஒருவனாகமட்டுமே இருக்க முடியும், அவனும் ஒரு பெண்ணின் வாயிலாகத்தான் பிறந்திருக்கமுடியும்...அப்படி அவனைப் பெற்றவள் வேண்டுமானால் வணக்கத்துகுறியவளாகிறாளேயன்றி, பிறந்த மகனோ, அவனது தொண்டர்களோ அல்ல....ஒரு தாய்க்கு தெரியும் நல்லது கெட்டதை விடவா அறிஞர்களுக்குத் தெரிந்து விடப் போகிறது......சமஉரிமையை பேசுவோமானால் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள்என்று இருவர் அல்லவா வழி காட்டவேண்டும்..ஏன் தந்தை கடவுள் காட்டும் வழியை மட்டுமே வேதம்என்கிறோம். 

நீயா நானா கேடு கெட்ட நிகழ்ச்சி என்பதில் எனக்கும் உடன்பாடுதான், அவர் சொல்லியுள்ளபடி விளம்பரத்திற்காகஅதில் கலந்து கொள்வது பயனற்றதுவே...ஆனால் மார்க்கத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை மார்க்கத்தவரே பேசவேண்டும், பொது வெளியில் மார்க்கத்தை விட்டு கொடுக்கக் கூடாது என்று நிணைப்பவர்கள் அத்தகைய சுதந்திரத்தை மார்கத்தினுள்ளேயே திறந்த மனதுடன் அனுமதிக்க வேண்டும்...பெண்கள் பிரச்சனையாயின் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் நியாயத்தின் பெயரால் கிடைக்க வேண்டும்...இல்லையேல் பெண் எனும் அடையாளத்தோடு...பொதுவெளியில் எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதை தள்ளிப்போட முடியுமேயன்றி, எவரும் தடுக்க இயலாது.
November 27 at 10:31am · Like ·  12
Maiyuran Kana confused. how ameer's tamil pattru is related to this event? oosai pls explain.
November 27 at 10:58am · Like ·  1
Balraj Srinivasan Explicit candid view from nirmala kotravai stands worthy of appreciation
November 27 at 11:24am · Like
Dhilip Joe Ramki எங்கே தானே சிந்தித்து விட்டால் என்ன பண்ணுவது. தம் மதத்து பெண்கள் சிந்திக்க கூடாது! ஹிந்து முஸ்லிம் பெண்களை பேச விட்டால், மத கலவரம் ஆகாதா!
November 27 at 11:25am · Like ·  2
Shaheer Mohammed @nirmala . sis i just commented on the topic of Mr.chellai given for this post.otherwise myself i dont want to comment on the speakers voice.
November 27 at 11:49am · Like
Nirmala Kotravai thanks Mr. Balraj Srinivasan. @Mr.shaheer Mohammed..I have commented on speaker's comments on women & not on any particular faith at this point...thanks
November 27 at 12:04pm · Like
Srsekhar எஸ்சார்சேகர் விமர்சிக்கவே அஞ்சும் நிலைக்கு மதத்தின் மதம் ஏறிவிட்டதோ..ஆவேசமாக விமர்சித்தவர்கள் அடங்கிப்போக அதுவே காரணமோ--யாரை யார் வேண்டுமானாலும்--எப்படிவேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்பது இந்துமதத்தில் மட்டுமோ..சாத்தியம்.
November 27 at 12:54pm · Like ·  2
Nirmala Kotravai மாற்று மதத்தவர், இன்னொரு மதத்தை விமர்சிக்க அஞ்சத்தேவையில்லை ஆனால் அம்மதத்தின் நூல்களை, போதனைகளை முழுமையாக படித்துவிட்டு விமர்சிக்க வேண்டும் என்பது அறம். மேலும் அவ்விமர்சனத்தின் நோக்கம் தவறுகளை சுட்டிக் காட்டுவதாக, மனித இன மேம்பாட்டிற்காக இருப்பது தோழமை. வேற்று மதம் என்பதால் குறை கண்டுபிடிப்பதாக இருப்பின் அது அறமன்று. இந்து மதத்தில் பிறந்ததாக அறிப்படுபவர்களுக்கு அம்மதத்தின் போதனைகள் பிறப்பிலேயே வழங்கப்படுவதால், அதை விமர்சிக்கும் சாத்தியம் எளிதில் கிட்டிவிடுகிறது. கூறுணர்வு முக்கியம் என்று கருதுவது அச்சம் என்றாகிவிடாது.
November 27 at 1:17pm · Like ·  3
Shaheer Mohammed @Mr.srsekar மதத்தின் மதம் எப்படி என்பது தெரியவில்லை ஆனால் எனக்கு அந்த மனிதர் பேசிய விசயத்தில் ஞானம் குறைவு . அதனால் கூத்தாட வேண்டாம் என்று நினைத்துதான் விமர்சிக்கவில்லை
November 27 at 1:42pm · Like
Srsekhar எஸ்சார்சேகர் கூறுணர்வு முக்கியம் என்று கருதுவது அச்சம் என்றாகிவிடாது.--இது தங்கள் பண்பின் பிரதிபலிப்பு--இந்துமதத்தை விமர்சிப்பவர்கள் எவ்வளவுபேர்..போதனைகளை--நூல்களை படித்துவிட்டு விமரசிக்கிறார்கள்...அவர்கள் மீது பத்வாபோட ஏதாவது அமைப்பு இங்கு இருக்கிறதா--மாற்று மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகளா--நேற்றைய நமது சகோதரர்கள்தானே--மதம் அன்னியதாக இருக்கலாம்--மண் நம்முடையதுதானே--மண் வாசனையை மறக்கலாமா----கருத்து சொல்லக்கூட அஞ்சும் நிலையை ஒர் மதம் உருவாக்கலாமா--
November 27 at 1:45pm · Like ·  1
Balaji Rm செல்ல அண்னா இவர் யாருன்னு எனக்கு கொஞ்சம் வெவரம் அனுப்புங்க என்ன பேசுறார் இவர் ஆ...ஊ...ன...இந்து பொம்பள முஸ்லீம் பொம்பளன்னும் அடுத்து மீடியாவுல உள்ளவங்கள அவெஞெ...இவெஞெ...ன்னு பேசுறது முறையா?பெண்கள மறியாதையில்லாமல்.....அவளுக....இவளுக......நடுரோட்ல...அவுத்துப்போட்டு போவாளுகன்னு..அதுவும் ஒருகூட்டத்தை கூட்டிவச்சு இதுதான் இஸ்லாமா?இதுதான் மார்க்கமா? முதல்ல பொதுஇடங்களையும்?பொதுக்கூட்டங்களையும் ஆண்களையும் குறிப்பாக பெண்களையும் அவை மறியாதையுடன் பேசும் அறிவைவளர்த்துக்க சொல்லுங்கள் அப்பறம் டிவிச்சானலப்பத்தி பேசுனார் ண்னா... இவர்பேசுறதையே பாக்குரதக்கும்....கேக்குரதக்கும் ஒருகூட்டம் இருக்கும்போது?உலகம்முலுவதும் உள்ள தமிழகர்களுக்காக?அறிவை வளர்த்துக்கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டதுதான் டிவிச்சானலும்! இ..பேப்பர் நியூஸ்ம்! அத முதல்ல இந்தகூட்டம் தெறிஞ்சுக்கொல்லட்டும் அப்பறம் சீமான் சார் நீங்க அரசியல் பன்னுங்க அதற்க்கு எவ்வலவோ வழி இருக்கு? அது இது இல்ல? நீங்க போற இடமெல்லாம் பொதுமக்களும் குறிப்பாக இளைஞர்க்கூட்டம் ஆகா நமக்காக குரல்குடுக்க சீமாண்னெ இருக்கார்ருனு?ஆனால் என்ன சாபமோ...கொபமோ அட..போங்கசார்?நீங்களும் சறாசரின்னு நிருபிச்சுட்டிங்க அதுவேற ஒன்னுமில்லைசார் ஒங்கலோட கோபமானபேச்சும் உங்க கழுத்துநறம்பு புடைக்க பேசும் ஆவேசமும் எங்களை ஏமாறவச்சிருச்சு பாவம் நீங்க என்ன பன்னுவீங்க அந்தக்காலத்திலேருந்து பாரம்பர்யமா வர்துதானுங்களே? சார் என் மாப்பிள ஒருத்தன் ஒங்கமேலா அதீத நம்பிக்கைல என்கிட்ட பேசுவான் ஒங்களோட கோபமானப்பார்வை?வீரமானபேச்சும் அவனைக்கட்டிபோட்டுருச்சு நான் அப்பவே சொன்னேன் டேய்மாப்ளை அவங்க எல்லாம் சினிமாக்காரங்கடா....சாட்...ரெடி...டேக்னு சொல்லாம நடிச்சுக்கிட்டு இருக்காங்கடானு சொன்னேன் அவன் கேக்கல பதிலுக்கு பதில் என்கிட்டபேசுவான் பாவம் என் மாப்ளைய என்கிட்ட தலைகுனிய வச்சுட்டீங்களே ஒகெ சார்...சார்...சார் ஒரு நிமிசம் நீங்க என்னசெய்யிறங்கின்னா நம்ம குமுளி பாடர்ல ஒக்காந்துக்கிட்டு முல்லைப்பெரியார் எங்களுக்குத்தான் சொந்தம்னும்......ஒசூர் பாடர்ல ஒக்காந்துகிட்டு எங்களுக்கு இவ்வலவு கன அடி...நீர் வேனும் இல்லைய்னால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் போவோம்னும்....ஆந்திராபாடர் காட்பாடியில ஒக்காந்து எங்களுக்கு கிருஸ்னா நதியிலருந்து...இத்தனை கன அடி நீர் வேனும்னு போராடலாம் சார் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அதுனால் உங்கவழக்க மான? கோபமான?வீரமான பேசுங்க நாங்கதானிருக்க்மே(முழு நம்பிக்கையோடு ஏமாறுவதர்க்கும்)கை தட்டுவதற்க்கு? தமிழேன்......தமிழேன்.....தமிழேன்.....வலிக்குதுடா...மனசு...வார்........த்தை....வர.....மாட்டேங்குது .......சாரி
November 27 at 2:03pm · Like ·  2
Nirmala Kotravai இந்து மதத்திலும் பெரிய ஜனநாயகப் பண்பு இருப்பதாக சொல்லிவிட முடியாது. பெரும்பாலும், வெளிப்படையாக தண்டிப்பதில்லை அவ்வளவுதான். அது விமர்சிக்கும் எல்லோரையும் தாக்குவதில்லை எனினும், ஆள் பார்த்து, பிரபல்யம் பார்த்து, தேவை பார்த்து ஒரு வியூகத்தை நவீன வடிவத்தில், அரசியல் தந்திரமாகத் தொடுக்கும்...கலாச்சாரா போலீசிங் என்ற பெயரில் என்ன செய்கிறது..இந்திய இறையாண்மை என்ற பெயரில் இந்துத்துவ இறையாணமையைத் தானே வலியுறுத்துகிறது...எம்மதமும் இதில் விதிவிலக்கில்லை......பத்வாவையும் மீறி கலகக் குரல்கள் எழுந்த வண்ணம் இருப்பது ஆறுதல்.
November 27 at 2:22pm · Like ·  3
Bharat Voice Sujin @nirmala 

கலாச்சார போலீஸ் என்று நீங்கள் ராம் சேனாவினரை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கலாச்சார போலீஸ் பள்ளிக்கூடத்துக்கோ, கல்லூரிக்கோ போகும் யாரையும் அடிக்கவில்லை, பப்புக்கு போகும் கீழ்தனமாவர்களை தான் அடித்தார்கள். காதல் செய்யோரை தாக்கவில்லை, காதல் என்ற பெயரில் நடு தெருவில் 5 அறிவு ஜிவன் போல உலாவும் மிருகங்களைத் தான் தாக்கினார்கள். இவை அனைத்துமே நியாயப்படி அரசு போலீசாரால் தடுக்கப்பட வேண்டிய விஷ்யம். ஆனால் அவர்கள் தடுப்பதில்லை. ஆதனால், இந்த கீழ்தனமான செயல்களை கலாச்சார போலீஸ் தடுக்கிறது. இது பாரத நாடு. இந்த நாட்டுக்கு என்று சில கலாச்சார நெறிமுறைகள் இருக்கிறது. அதை காப்பாற்றுவதில் தவறில்லையே? "இந்த கலாச்சார நெறிமுறைகள் பிடிக்கவில்லை. எங்களுக்கு Western culture தான் பிடிக்கும்" என்றால் தயவு செய்து எங்கள் நாட்டை விட்டு வெளியேறி, Americaவிலோ, அல்லது ANTARTICAவிலோ குடியேறிவிடுங்கள். ஜனநாயகம் என்ற பெயரில் கலாச்சாரத்தை அழிக்காதீர்கள்.
November 27 at 2:53pm · Like ·  5
Sathesh Kumar Bharat Voice Sujin :

Excellent view point-- I second your opinion.
November 27 at 3:47pm · Like ·  1
Expand Preview
November 27 at 3:53pm · Like
Shaheer Mohammed all those who wanted to group people In the name of religion , region or beliefs are really making fool of us.
November 27 at 3:55pm · Like
Hari Krishnan Prabhakar There are lot of Iranian women in Dubai who like Dubai because of the Freedom they enjoy and the liberal attitude towards dressing !!!
November 27 at 3:59pm · Like ·  2
Hari Krishnan Prabhakar There is also a version behind wearing the Abhaya(Burka) and Khandoora (White Robe worn by Arab Men) narrated to me by an Arab as: It was convenient during those days, living in desert conditions, where sand storms were frequent and hence the top-to-bottom cover for both men and women.
November 27 at 4:05pm · Like
Ahamed Yaser Ameer thaan saarntha maarkathai kochai paduthum vithamaaga amaintha nigalchiyai kantu varutha pattullaar.... Ithukukum thamil unarvukum Enna sammantham????? Thamil naatula pirantha hintu, Muslim, cristine yaaraa irunthaalum thamil unarvu Kantippaa irukkum, ethunaa post pannanumnu friends kitta publicity vaangikine irukanumnu lachiyamo.....
November 27 at 4:05pm · Like ·  1
Ahamed Yaser Ladies burka podurathukum adakumuraikum Enna sammantham irukku.... Burka yean use panraanganu therinjukittu Appuram Atha pathi pesunga....
November 27 at 4:10pm · Like
Nirmala Kotravai bharat: பாரத நாடா? உங்கள் நாடா? வேடிக்கை..வேடிக்கை..இந்தியா என்ற நாடு யாரால்..எப்படி ஒருங்கிணைக்கப் பட்டது என்று வரலாற்றை நான் படித்டிருக்கிறேன்...ராம் சேனேவினர் யாரை அடித்தார்கள் என்று எனக்கும் தெரியும்..காந்தியை உங்களுக்கும் தெரியும் தானே..யார், எதற்காக அவரைக் கொன்றார்கள்...ஆமாம்...பௌத்தம் எந்த நாட்டில் தோன்றியது, அதை விரட்டியடித்தது யார்...பௌத்த கோவிலகள் இடிக்கப்பட்டது யாரால்....ஜைனர்களை கழுவில் ஏற்றியது யார்...எதுங்க பாரத கலாச்சாரம்...எதுக்காக இங்க இருக்குறவுங்க...மதம் மாறுனாங்க....மேற்கத்தியர்களுடன் கூச்சமின்றி கூட்டு வைச்சுகிட்டு ஆங்கிலத்த அவசர அவசரமா கத்துகிட்டு அவனுகளுக்காக வேலை செஞ்சது யாரு....வாஞ்சிநாதன் எதுக்காக ஆஷ் துறையக் கொன்னாரு...அம்பேத்கர் இந்து மேதாவிகளவிட நிறைய படிச்சுட்டு வேலைல சேர்ந்தப்புரமும்...தண்ணி குடிக்குற லோட்டாவை தொடக்கூடாதுன்னு சொன்னது யாரு....பூனா ஒப்பந்தக் கதையின் நீதில் பாரதத்தின் நீதி ஊசலாடுது.....சர்ச்சுக்கு போனால் யார் வேணா கர்ப்பக்கிரகம்னு சொல்லப்படுற இடத்த தொட்டுக் கும்பிடலாம்....இந்துத்துவத்திற்காக பரிஞ்சு பேசுற உங்களக் கூட அங்க விடமாட்டாங்க...

தாய் தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடுங்குற பூர்வகுடிகளோட சாமிகள, நம்பிக்கைகள மாத்தி அப்பாவகடவுளாக்குனது யாரு....பொம்பளைங்களும், சூத்திரர்களும் ஒண்ணு...அவங்க நரகத்துக்குத்தான் போவாங்கன்னு சொல்ற மனுஸ்ம்ருதிய எந்த கலாச்சாரத்துல சேக்குறது. பூர்வகுடிகள இடுப்புல துடைப்பமும், கழுத்துல எச்சில் துப்புற கிண்ணத்தையும் கட்டிகுட்டு நடக்க சொன்ன கலாச்சாரம்தான் பாரத கலாச்சாரமா....அந்த கலாச்சாரம் விதைச்ச நஞ்ச இன்னைக்கு வரைக்கும் புடுங்க முடியலைங்க......

பூர்வக் குடிகள சாதியின் பேரால அடிமையாக்கிப் பொழைக்குறவுங்க, ராஜாங்ககிட்ட காலப் புடிச்சு நிலங்கள கோயில் பேரால சுருட்டுனவுங்க, அந்த கோயிலுக்குள்ளேயே பொம்பளைங்கள கொஞ்சிக் குலவுனவரு, கொலை செஞ்சவரு, மடம்ங்குர பேர்ல சொத்துகள சுருட்டுரவுங்க எல்லாரையும் இந்த பாரத நாடு தாங்குறாப்போல என்னை மாதிரி ஆட்களையும் தாங்கிட்டுபோகுது.
November 27 at 4:34pm · Like ·  3
கார்பன் கூட்டாளி Nirmala Kotravai vivaathamseiya oru varaimurai thevai illaiyaa?
November 27 at 4:35pm · Like
Osai Chella So tamils as an ethnic group dont have a culture sans hindu r islam r christianity r samanam? That is the topic i intented to debate ! R we naked ppl ? What about tamil culture which avvaiyaar came and shared the seat with kings?
November 27 at 4:35pm · Like ·  1
Nirmala Kotravai கார்பன் கூட்டாளி - என்ன வரைமுறை மீறலை சொல்கிறீர்கள்...
November 27 at 4:41pm · Like ·  1
Osai Chella Tamils r one of the nature loving races which is very very cosmopolitan and gave pluralist cultures which are in tune with their landscapes ie kurinji, mullai etc.
November 27 at 4:44pm · Like ·  1
Osai Chella Dravidian past is an amazing cosmopolitan and equal rights society where akam and puram are amazingly synched ! Even we had perundhinai defined but not condemned!
November 27 at 4:50pm · Like ·  1
Osai Chella தமிழன் தனது கலாச்சாரத்தைவிட அதன் அறவியல் எண்ணக்கூறுகளை முக்கியமானதாக கருதியிருக்கவேண்டும் ! அதனாலேயே அவன் உலகெங்கிலும் தொடர்பும் வியாபாரமும் செய்திருக்கமுடிந்திருக்கிறது ! (உ-ம்: யாதும் ஊரே . . . யாவரும் கேளிர் . . . சாதி இரண்டெஒழிய வேறில்லை . . . எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்த மடத்தனமான மதக்கோட்பாடுகளை விட சாலச்சிறந்த நெகிழ்வுடன் எதிர்காலத்தை அதன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பழையன கழிதலும் புதியன புகுதலும் . . . என்ற அறிவியல் பூர்வமான பரிணாமத்தன்மையை , பரிமாணமாக ஏற்றுக்கொண்டது !
November 27 at 5:24pm · Like ·  2
Osai Chella காலத்துக்கும் இடத்துக்கும் அறிவுக்கும் நெகிழ்ந்துகுடுத்த தமிழின மாண்பை மதமோ மதமற்றவர்களோ கொஞ்சம் கவனியுங்கள் . . . அதைவிடுத்து காலத்துக்கும், இடத்துக்கும், அறிவியலுக்கும் உளவியலுக்கும் பொறுந்தாத மதமோ கலாச்சாரமோ .... காலத்தால் கறைந்துபோம் !
November 27 at 5:27pm · Like ·  1
Osai Chella நிர்மலா கொற்றவை கூறியதுபோல ராமன் சேனாக்கள் கல்லெறியவேண்டியது அவர்கள் தர்மப்படி அவர்கள் கர்ப்பக்கிரகத்தில் அவர்கள் செய்யக்கூடாத புனிதத்தை அரங்கேற்றிய குருக்களைத்தானே தவிர . . . பஃப்க்கும் போகும் பெண்களையல்ல ! அவர்கள் போலிகள் அல்லவே !
November 27 at 5:31pm · Like ·  1
Osai Chella மப்படிப்பது பப் அடிப்பதும் யதுகுலம் காலந்தொட்டு நடப்பதுதானே என்பது இந்த சேனாக்களுக்குத்தெரியுமா என்பதை வடநாட்டு மக்கள்தான் கேட்கவேண்டும் ! நான் பலமுறை சொல்வதுபோல பெரியாரும் அம்பேத்காரும் இல்லாத ஒரு பாரதத்தை ஒரு நாடாகக்கூட என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது ! அம்புட்டு அயோக்கியத்தனமான விசயங்களும் சமூகத்தில் அரங்கேறிய பகுதியாக்கும் இந்த புண்ணிய பூமி !
November 27 at 5:35pm · Like ·  2
Bharat Voice Sujin @Nirmala 

ஒருங்கினைப்பு வரலாறு பற்றி கூறினீர்கள். சரி. உண்மை தான், இந்துக்களிடம் ஒற்றுமையில்லை, அதனால் பாரதம் சிறு சிறு ராஜியங்களாக பிரிந்திருந்து. ஆனால், பாரதம் என்றுமே ஒன்றினையவில்லை என்பது தவறான கருத்து. இதிகாசங்களில் பரதன் என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் நம் நாடு இருந்துள்ளது. விஷ்ணு புராணத்தில் பாரத நாட்டின் எல்லை கூட கூறப்பட்டுள்ளது. உடனே நீங்கள் இது கட்டுக்கதை என்பீர்கள். அப்படியே இருந்தாலும் இந்து முறையில் நாங்கள் எங்கள் பாரத நாட்டில் சேர்ந்தே இருப்போம். சரி, இன்று உங்களை போன்றோர் தமிழ்நாடு தனிநாடு என்று கோசம் பொடுகிறீர்களே, தமிழ்நாடு மட்டும் ஒருங்கிணைந்திருந்ததா? உங்கள் வரலாற்று ரீதீயில் அதுவும் வெள்ளையன் ஒருங்கினைத்தது தானே? காந்தியை இந்துத்வா சிந்தனை கொண்ட கோட்சே கொன்றார் அதில் தவறில்லையே. காந்தி "என் பிணத்தின் மீது தான், பாரத பிரிவினை நடக்கும்" என்று கூறி இந்துக்களை ஏமாற்றினார். இதே காந்தி தான், பிரிவினையை நடத்திய பின்பு, பாரதம் பாகிஸ்தானுக்கு 50 கோடி கொடுக்க வேண்டும் என்றார். பிரிவினையின் போது, பல லட்சம் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது காந்தியின் அகிம்சை உறங்கியதா? இந்துக்களிடம் சில திரிக்கப்பட்ட தவறான விஷ்யங்கள் நடைமுறையில் உள்ளது என்பது உண்மையே. இதில் ஒன்று தான் சாதி. ஆனால், இதற்கு இந்து மதம் காரணமல்ல. இதை பற்றி தெரிந்து கொள்ளhttp://hindu.friendhood.net/ என்ற முகவரியில் "இந்து சமய விளக்கம்" பகுதியில், சாதியா? சதியா? என்ற கட்டுரையை படியுங்கள். அதிலேயே மணு பற்றியும் இருக்கிறது.
November 27 at 5:35pm · Like ·  2
Osai Chella அவர்களது சிந்தனைகள் இன்னமும் உலாவருவதாலேயே இன்று பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நிலவுக்கும் அணுவுக்கும் பயணிக்கிறது பாரதம் !
November 27 at 5:37pm · Like
Osai Chella எல்லாவற்றை விடவும் முக்கியமானது சுயமரியாதை மற்றும் சுயசிந்தனை . . . இவற்றை மழுங்கடிக்கும் அனைத்து வேதங்களும் மதங்களும் அதன் உள்முரண்களாலும் போலித்தன்மைகளாலும் உளவியல் மோதல்களாலும் வலிவிழந்து அழியும் !
November 27 at 5:40pm · Like ·  2
Osai Chella அறிவியல் எப்படி எம்மதத்தின் கட்டுப்பாடுகளையும் தவிடு பொடியாக்கி அசைக்கவியலாத சக்தியாக பிரவாகித்தோடுகிறது என்றால் அது தன்னைத்தானே அவ்வப்போது சுயபரிசோதனைக்கு அதை உட்படுத்திக்கொள்வதேயாகும் !
November 27 at 5:44pm · Like ·  2
Osai Chella All Dogmas will be annihilated by the ever growing influence of science and technology !
November 27 at 5:45pm · Like ·  2
Osai Chella Human Evolution wont stop ! Simple ppl simply speak ! that is it !
November 27 at 5:46pm · Like ·  2
Osai Chella Back to topic.. if ameer is so particular about his dogmas and women let him make films with Fully Covered Women of His Dogma ! கண்களைக்கூட மறைக்கும் அளவுக்கு உடையணிந்த பெண்களை மடும் அவர் படங்களுக்கு உபயோகித்துக்கொள்ளட்டும் ! மீடியா நண்பர்கள் இதை அவரிடம் அவசியல் கேட்கவேண்டும் !
November 27 at 5:50pm · Like ·  3
Ragunaath Rathnam // All Dogmas will be annihilated by the ever growing influence of science and technology ! //

Precisely.
November 27 at 6:13pm · Like

Kindly Subscriptionhttp://www.youtube.com/user/KhalidChennaiChannel For More En...See More
November 27 at 6:14pm · Like
Nirmala Kotravai Bharat voice: தமிழ்நாடு தனி நாடு என்பது மொழியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் பேசப்படும் ஒன்று...மதம், கலாச்சாரம் எனும் அடிப்படையில் அல்ல...அதுவும்..தமிழ் மொழி பேசப்பட்ட குறுநிலங்கள், பெறுநிலங்கள் பற்றிய புவியியல் குறிப்புகள் உள்ளதன் அடிப்படையில்.....நீங்கள் சொல்லும் புராணங்கள் எதுவும் தமிழனால் எழுதப்பட்டதல்ல.....அதற்கு முன் இந்துமுறை இருந்ததாக எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்...அதே உறுதியோடு அது அப்படி இல்லை என்று நான் ஏன் சொல்லக்கூடாது, உங்களுக்கு ஆதாரங்கள் இருப்பது போல், எங்களுக்கும் அது அவ்வாறில்லை, சதி என்று ஆதாரங்கள் உள்ளது... காந்தியைக் கொண்றதில் தவறில்லை....தொந்தரவாய் இருப்பவர்களை கொல்வதில் நியாயம் கற்பிக்க சொல்லிக் கொடுப்பதுதானே புராணங்கள்....காந்திதான் ஏமாந்துபோனார் பாவம்......பெஸ்ட் பேக்கரி வன்முறைச் சம்பவத்தில் இசுலாமிய பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவைக் வீசியெறிந்தது பொய் என்பீர்கள்...அதேபிரிவினையின் போது இசுலாமியப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளனர்.....இந்து சமயம் பற்றி விளக்கங்களை நான் போதுமானவரை படித்துவிட்டேன்.....//இந்துக்களிடம் ஒற்றுமையில்லை, அதனால் பாரதம் சிறு சிறு ராஜியங்களாக பிரிந்திருந்து. // - சிறந்த நகைச்சுவை துணுக்கு....இந்து மதம் என்பதை 7ஆம் நூற்றுண்டு பக்தி இயக்கத்தின் போது திருவாளர் சங்கரர் பௌத்தத்திற்கும், மதமாற்றங்களுக்கும் அஞ்சி ஒருங்கிணைத்த ஒன்று...நீங்கள் உங்களைப் பற்றி இந்துத்துவவாதி என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள் அதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை.
November 27 at 7:09pm · Like ·  1
Nirmala Kotravai மதம் பற்றிய தர்க்கத்தில், அதன் மூலம் கண்காணிப்பில் ஈடுபடுவது, சண்டைகளில் அதிகம் ஈடுபடுவது ஆண்கள் என்பதிலிருந்தே அதை தோற்றுவித்தது யார், அதன் தேவை யாருக்கு அதிகமாக இருக்கிறது, பயன் யாருக்கு என்பது விளங்குகிறது.
Abhi Lash this gentleman is vying for limelight yet conflicts thru his words.
November 27 at 10:54pm · Like
Bharat Voice Sujin @ NIRMALA 
இந்துத்வாவாதியிடம் பேச முடியாது என்று கூறிவிட்டீர்கள். அதுவே தங்களின் விருப்பம் என்றால், அதற்கு நானும் உடன்படுகிறேன். இருந்தாலும் என் விவாதத்தை முடிப்பதற்கு முன் சில விஷ்யங்களை கூறிவிடுகிறேன். மொழி அடைப்படையில் தமிழ்நாட்டை பிரிப்பது என்பது தான் பெரிய நகைச்சுவை துணுக்காக தெரிகிறது. தமிழ் என்பது பாரதத்தின் ஒரு மொழி. அம்மொழி பாரதத்தில் இணைந்து தான் இருக்குமே தவிற, என்றுமே யாராலும் பிரித்துவிட முடியாது. மொழி அடிப்படியில் தமிழ்நாடு வேண்டும் என்பவர்களின் நிலைப்பட்டையும், திராவிட நாடு என்பவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். திராவிட கழக தலைவர், நீங்கள் நேசிக்கும் பெரியாரே, காமராசர் என்ற தேசியவாதியுடன் தான் ஒரு காலத்தில் கூட்டு சேர்ந்தார் என்பதை மறந்துவிடாதீர்கள். காந்தி ஏமாந்துவிடவில்லை. இந்துக்களை ஏமாற்றினார் என்பது தான் உண்மை. 
நன்றி.
November 27 at 11:29pm · Like
Nirmala Kotravai நீங்கள் நான் வைத்த இந்துத்துவ அழித்தொழிப்புகளை பற்றி பதில்கள் எதையும் சொல்லாமல்..சதி என்று ஏதோ சமாதனம் சொல்லிவிட்டு முடித்துவிட்டீர்கள்..தமிழ் மட்டுமல்ல...எல்லா இனமும் எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறது...பெரியாரின் ஜனநாயகத்தன்மை, பண்பு பற்றி எனக்கும் தெரியும்...ராஜாஜி தன் வீட்டிற்கு வந்தபோது திருநூறு கொடுத்து உபசரித்தவர் அவர்...ஏமாற்றினார் கொன்று போட்டோம், தவறு செய்தார்கள் தண்டித்தோம் என்று நியாயப்படுத்தும் வன்முறைக் கருத்துக்களை கொண்டவர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது...தண்டனை கொடுக்க ராம் சேனை யார்? தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை....உங்கள் கடவுள் சக்திவாய்ந்தவராக இருந்தால் எங்களுடன் நேரடியாக அவரை மல்லுகட்டச் சொல்லுங்கள்.......அத்தோடு பீட்ஜாவையும், பர்கரையும், பெப்ஸி, கோக்கையும்,இன்னும் இதர அமெரிக்க பழக்கவழக்கங்களையும், வால்மார்ட்டையும் இந்தியாவுக்குள்..அதாவது பெருமை மிக்க பாரதத்திற்குள் நுழையவிடாமல் தடுக்க்ச் சொல்லுங்கள்.....இப்படி எங்களை மொத்தமாக உருவி அடகுவைத்திவிடும் இந்த பாரதம் என்று தெரிந்துதான் நாங்களாவது தப்பித்துக்கொள்ள வேண்டாமா....இவ்வளவு மோசமான திராவிடர்கள்..தமிழ்ர்கள் இந்த பெருமை மிக்க பாரத்திற்கு எதற்குத் தேவை....
November 28 at 8:34am · Like
Nirmala Kotravai அம்பேத்கருக்கு செய்த துரோகம், சாதிய வெறி புகுத்தியது...என்று எல்லாக் கேள்விகளையும் மழுப்பலாக முடித்துக்கொண்டு...தமிழர் பிரச்சனையைப் பேசுவதிலிருந்துஅயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசப்பற்று என உரைத்த பெரியாரின்கூற்றும் நினைவுக்கு வருகிறது.
November 28 at 8:43am · Like ·  2
Bharat Voice Sujin @Nirmala 

நீங்கள் பேச விரும்பவில்லை என்று கூறியதால் தான் நான் முடிக்கவேண்டியதாயிற்று. நீங்கள் தொடரும் பட்சத்தில் நானும் தொடர்கிறேன். 

குஜராத் கலவரம்... கலவரம் கலவரம் என்று உங்களைப் போல பலர் கூப்பாடு போடுகிறார்கள். உண்மை. அங்கு கலவரம் நடந்தது. முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர். இந்துக்களும் தாக்கப்பட்டனர். ஆனால், அங்கு கலவரம் தொடங்க யார் காரணம்? கோத்ரா ரயிலை எரித்தது யார்? பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்காமல், எரித்தது யார்? இந்த சம்பவத்தை மறைத்துவிட்டு இந்து வெறி வெறி என்று கூப்பாடு போடுவது எப்படி சரியாகும்? இதை எல்லாம் மன்னித்து விட எல்லா இந்துக்ளும் ஒன்றும் சாதுக்கள் இல்லையே. நாங்களும் உங்களைப் போன்று சாதாரண மனிதர்கள் தான். உங்களிடம் இருக்கும் கோபம், பாசம் எல்லாம் எங்களுக்கும் இருக்கிறது. இதன் வெளிப்படு தான் கலவரமாக அங்கு அமைந்தது. 

கடவுள் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா? கடவுள் தொடர்பு கொள்ள நீங்கள் ஒன்றும் அன்மீகவாதி இல்லையே

சரி, காந்தியை கொன்றோம். அதை நியாயப்படுத்துகிறோம் என்கிறீர்கள் எதோ பெரிய அகிம்சைவாதிகள் போல. ஆனால், உங்களைப் போன்றோர் தனே விடுதலை புலிகளையும் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறீர்கள்? விடுதலை புலிகளின் போரில் நியாயம் இருக்கிறது என்பது தான் எனது நிலைப்பாடு. ஆனால், காந்தி விஷ்யத்தில் அகிம்சை பேசிய நீங்கள் இந்த விஷ்யத்தில் தடம்புரள்வது சரியா

தவறு செய்பவர்களை தண்டிக்க ராம் சேனா யார்? நல்ல கேள்வி. அதே சமயம் எங்கள் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று கூற நீங்கள் யார்? என்ற கேள்வி இயல்பாகவே உங்கள் முன் திரும்புமே? திகவினர் எத்தனை சிறு தெய்வ வழிபாடுத் சிலைகளை அழித்திருக்கிறீர்கள். அது கூட வன்முறை தானே

எனது 8 வயதில் இருந்து நான் பெப்சி, கோக் போன்ற பானங்களை பருகுவதில்லை. நச்சயமாக இந்த பானங்கள் மட்டுமல்ல, பிற ஊறுவிளைவிக்கும் தின்பண்டங்களையும் அனுமதிக்க கூடாது. இதில் மாற்று கருத்தில்லை. 

என் சாதி தான் பெரியது என்று பிராமணன் கூறினாலும் தவறு தான். பறையர் கூறினாலும் தவறு தான். 
அம்பேத்கர் தலித்துகளை ஆதரித்தார். ஆனால், பிற சாதியினரை எதிர்க்கவில்லை. ஒதுக்கவில்லை. சாதியை இந்து மதம் ஒன்றும் அதரிக்கவில்லை. ஏற்ற தாழ்வையும் கற்பிக்கவில்லை. இவை அனைத்தும் தங்களுக்காக, ஒரு சிலர் ஒரு சில விஷ்யங்களை திரித்துக்கொண்டனர். அதில் ஒன்று தான் சாதி. இதைப் பற்றிய ஒரு LINKயை நான் உங்களுக்கு தந்திருந்தேன். FREEயாக இருக்கும் போது அதை படிக்கலாமே. அம்பேத்காரின் சாதி நிலைப்பாட்டை ஆதரிக்கும் நீங்கள், அவரின் இஸ்லாமிய நிலைப்பாட்டையும் ஆதரிப்பீற்களா

தேசபற்று அயோக்கிர்களின் புகலிடமா? பெரியார் ஒரு நல்ல நகைச்சுவையாளர்.
November 28 at 11:23am · Like
Osai Chella Nanba hindu matham patri konjam sollunga ! Athu engu saathikal illai endru solluthu? Saadhiyum theendaamaiyum mahaa paavam endru engu solkiradhu? Appadi seithavarkalai evvaru thandithathu endru vedam, vedaantam, puraanam endru sollungalen! Ketkalaam! I like it!
November 28 at 11:45am · Like
Osai Chella Hope u wönt runaway ! I know a bit of things on hinduism and a little bit of history too.
November 28 at 11:48am · Like
Nirmala Kotravai நீங்கள் உங்களுக்கு சார்ப்பாக என் பற்றியக் கருத்திக்களை திரிக்கிறீர்கள். புலிகளின் அரசியலை ஆதரித்து நான் எங்கு பதிவு செய்துள்ளேன்...அது ஒருபுறமிருக்க...சந்திரா சாமியும், சுப்பிரமணிய சாமியும் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது அப்படியே கிடப்பில் இருக்கே ...அழித்தொழிப்புக்களுக்குப் பின்னால் இருப்பது மத அரசியல்...நீங்களும் மத அரசியலை மையமாகக் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ....அதன் ஏகாதிபத்திய ஆட்சிமுறைக்கு நிலம்தேவை அதையே தேசப்பற்று, ஒற்றுமை என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறது....அந்த உண்மை தெரிந்ததால் தான் பெரியார் அதை சரியாக சுட்டிக் காட்டினார்அவருக்கு நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே உள்ளது என்ன செய்ய….
நீங்கள் இன்னும் இந்து முஸ்லிம் முரண்களையே விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்..பௌத்தக்கோயில்களை அழித்து சிவன் கோயிலை கட்டியது பற்றி பேசலாம்புள்ளிவிபரங்கள் நிறைய உள்ளனசாதியின் பெயரால் மனிதர்களை கழுவில் ஏற்றிய இந்துத்துவத்தைவிடவா தி.கவினர் கற்களை தகர்த்தது வன்முறைஉங்கள் நம்பிக்கைகள் உங்களுக்கானவை….அதையே மதம் என்ற பெயரில் நிறுவனமாக்கி எல்லோர் மேலும் அரசியல் அதிகாரத்துடன் திணித்தால்அதை எதிர்க்கத்தானே வேணும்அதெற்கெல்லாம் முன்பு ஒரு அடக்குமுறை, அழித்தொழிப்பு வரலாறு இருக்கிறது….
November 28 at 11:52am · Like
Nirmala Kotravai /கடவுள் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா? கடவுள் தொடர்பு கொள்ள நீங்கள் ஒன்றும் அன்மீகவாதி இல்லையே? // - என்னையும் அவர் தானங்க படைச்சாருஎன்னை அவர் வழிக்கு கொண்டுபோகுறது அவ்வளவு கஷ்டமாதகுதி அடிப்படையில மட்டும் காட்சியளிக்குறவரு கடவுளா இருக்கமுடியாதே….

நீங்கள் பேசுவது மத அரசியல்நாங்கள் பேசுவது வர்க்க அரசியல்அதற்கு மக்கள் உரிமைகளும், வாழ்வாதாரங்களும்..சமத்துவமும், சுயமரியாதையும் பிரதானம்அதனால் தான் நிலம், அரசு, இவற்றிற்கெதிரான கருத்தியல்களை முன்வைக்கிறோம்
November 28 at 11:53am · Like
Nirmala Kotravai உங்க லிங்குகளைப் படிகக்வேண்டிய அவசியம் எனக்கில்லை…(தேவைப்பட்டால் என் வலைப்பதிவுகளை நீங்கள் படித்துப் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை) ஏனென்றால் நான் ஆன்மீகவாதி இல்லை….ஆனால் கோசாம்பி, ராகுல்ஜி, சீனிவாசன், மயிலை சீனி வேங்கடசாமி, சட்டோபாத்யாயா போன்ற வரலாற்றைக் காட்டிக் கொடுத்த இந்துக்களின்புத்தகங்களையும், இதர வரலாற்றாசிரியரின் புத்தகங்களைப் படித்த என் போன்றோர்..மத அடிப்படையில் மக்களை எதிர்நிலைகளில் வைத்துப் பார்ப்பதில்லைமேற்சொன்ன விவாதமுறை மதவாதிகளிடம் மேற்கொள்ளப்படுபவைவராலாற்று மாற்றம்நான்கு சமூக முறை மாற்றங்களால் நிகழ்ந்த ஒன்று..இனக் குழு, ஜனபதா, அரசுருவாக்கம், ஏகாதிபத்தியம் (முதலாளித்துவம்)அதேவேளை பொருளாதார மாற்றம்..மேய்ச்சல் பொருளாதாரம், வேளான் பொருளாதாரம், வணிகம், இயந்திரமயமாக்கல் என்று போய்க்கொண்டிருக்கிறது….மக்களை வர்க்க அரசியல் பார்வையை முன்வைத்து ஒன்றுசேர்க்க முடியாமல் தடுப்பது மதம்சாதி போன்றவை……அது எங்களுக்குத் தேவையில்லை
November 28 at 11:53am · Like
Nirmala Kotravai உங்களுக்கு அது மிகுந்த பயனளிக்கும் பட்சத்தில் தொடருங்கள்….அதை நாங்கள் எதிர்த்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் தான் இருப்போம்..எந்த நிலமும் எவருக்கும் சொந்தமில்லைஎன்பதே தமிழ் தேசியக் கோரிக்கையின் அடிநாதம்அது சுய ஆட்சி, சுயநிர்ணைய உரிமை என்ற கூறுகளைக் கொண்டதுஒடுக்கபப்டும்பொழுதுபிரிவினை என்பது கடைசிக் கட்டம்உங்களது கவனம் இந்திய வரைபடத்தில் துண்டு விழும் என்றிருந்தால்வந்துவிடமாட்டாரா கிருஷ்ன பகவான்அவர் என்றுமே நியாவான்கள் பக்கம் தானேமுடிவை அவர் கையில் விட்டுவிடலாமே….போர் என்று ஏதாவது வந்தால் பூர்வகுடிகளின் இரத்தத்தைதானமாக கேட்டாவது அவர் வெற்றியைப் பெற்றுத் தரமாட்டாரா…..
November 28 at 11:53am · Like ·  1
Osai Chella A basic question to Nirmala too! In the indian context wích one is hard to crack? Varkam or Saadhi?
November 28 at 11:59am · Like
Nirmala Kotravai :) In Indian context it is saathi...as the Fundamentalists are capitalizing upon it & infused it so hardly in the minds of people...but cracking the hard pot is the challenge...any proletarian struggle has been challenging for that matter...
November 28 at 1:25pm · Like ·  1
Osai Chella :-) ok !
November 28 at 1:43pm · Like
Osai Chella IMO Capitalism has its own fundamental logic /rules and hence it is also qualify as a rational enemy to be tackled ! But the irrational fundamentalism is always a challenge cause it need more subtler approaches and methods ! Periyar has really contributed a lot using his intellect than the knowledge and after a few decades the leftists too found that truth ! They refused even the existence of SAADHI for a long . . . and never initiated any struggle against it ! Dravidian Politics and Idealogy has filled that important gap but failed miserably when it encountered the Varkam . . the next level of battalion what LEFT was working out strategies ! A paradox !
November 28 at 1:51pm · Like
Nirmala Kotravai It is a historical process...nothing can be a perfect strategy isn't it..it evolves...amidst such fundamentalists oppression...
November 28 at 1:57pm · Like ·  1
Bharat Voice Sujin @ Nirmala 

சாதி என்கிறீர்கள், தீண்டாமை என்கிறீர்கள். அதற்கு காரணம் மதம் என்கிறீர்கள். ஆனால், அதனைப் பற்றிய விளக்கத்தை கட்டுரையாக அளித்தால், அதை படிக்க தேவையில்லை என்கிறீர்கள். எந்த ஒரு விஷ்யத்திலுமே மாற்று வரத்தான் செய்யும். அந்த மாற்று கருத்தை அறிந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லையே
osai அவர்களின் கேள்விக்கும் அக்காட்டுரை பதில் இருக்கிறது. ஆனால் அதைத் தான் நீங்கள் படிக்க மாட்டீர்களே. சரி அது உங்கள் விருப்பம். Oosai அவர்ளே ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுகிறேன். இதில் ஓட என்ன இருக்கிறது. 

புலி அரசியல் என்று உங்களை கூறிப்பிட்டு நான் சொல்லவில்லை. உங்களைப் போன்ற என்று தான் கூறினேன். அதாவது, பெரியார் சிந்தனை உடைய கட்சிகள் என்று சொல்லலாம் (ஒரு பகுதி கம்யூனிஸ்டகள் கூட புலி அதரவாளர்கள் தான்.). ராஜிவ் காந்தி செய்த தவறு, விடுதலைப் புலியை ஆத்திரமூட்டியது. அதனால் அவர்கள் ராஜிவ்க்கு எதிராக திரும்பினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் அப்பொது எங்கிருந்தார்கள்... என்று தொடர்ந்தால் இந்த விவாதம் நீண்டுவிடும் ஆதலால், இதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. 

கல்லை உடைத்தீற்களா? எந்த கல்லை உடைத்தீற்கள்? உங்கள் வீட்டின் முற்றத்தில் கிடந்த கூழாங்கற்களையா உடைத்தீர்கள்? கோவிலின் உள்ளிருப்பது உங்கள் கண்களுக்கு கல்லாக தெரியலாம். ஆனால், எங்கள் கண்களுக்கு கல் தெரியவில்லை, தெய்வம் தான் தெரிகிறது. கலவரம் பற்றி எல்லாம் அழகாக, சட்டத்தின் வழி நடப்பவர் போல கூறினீர்களே, கோயில் சிற்பங்களை உடைக்க எந்த சட்டம் உங்களுக்கு அனுமதியளித்தது? இது கூட கலவரத்தை தூண்டும் செயல் தானே

மத அரசியல் செய்வதாக கூறினீர்கள். நிச்சயமாக 100% மத அரசியல் தான் என் கொள்கை. உங்கள் பிரச்சாரத்தை தொடர்வேன் என்று கூறினீர்கள். கண்டிப்பாக நீங்கள் உங்கள் பிரச்சாரத்தை தொடரவேண்டும். இது கூட ஒரு விதத்தில் எங்களுக்கு வெற்றியாகத் தான் அமைகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில், திகவினர் அல்லது பிற இந்து வெறுப்பாளர்கள் எங்கள் மதத்தை இழிவுபடுத்திய சமயத்திலும், சிலைகளை உடைத்த போதும், அடுக்க தடுக்கவும் ஆழில்லை, தட்டி கேட்கவும் ஆழில்லை. அப்படியே ஒரு சில இடங்களில் இருந்தாலும், குறைவாகவே இருந்தனர். ஆனால், இன்று அப்படியல்ல. தமிழகம் முழுவதும் தடுக்கவும் ஆழிருக்கிறது. தட்டிக்கேட்கவும் ஆழிருக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இந்து மதத்துக்கு எதிராக பேசுகிறீர்களோ, அந்த அளவுக்கு இந்து ஒறுங்கினைப்பு வேகமாக நடக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு ஓர் உதாரணம் நான். என் பள்ளி காலங்களில், மதத்தை பற்றியோ, நம் நாட்டின் வரலாறு பற்றியோ தெரியாத நிலையிலேயே, நான் மத வேறுபட்டினை வேறுத்தேன். இந்து இயக்கங்கள் தேவை தானா? என்று கூட சிந்தித்தேன். ஆனால், திகவின் ஒருதலைப்ட்சமான பிரச்சாரம் என்னை சிந்திக்க வைத்து. கருணாவின் அறிக்கைகள் இந்து இயக்கங்களின் தேவையை உணர்த்தியது. அதன் வெளிப்படு, நான் என் நாட்டைப்பற்றியும், என் மதத்தைப் பற்றியும், இங்கு நிலவும் சூழ்நிலைப்பற்றியும் அறிந்துக் கொண்டேன். என்னை மாற்றிக் கொண்டேன்.
November 28 at 3:51pm · Like ·  2
Osai Chella Kodumaiye! Karuna arikkaiku imputtu mathippa!
November 28 at 4:29pm · Like
Osai Chella In sanskrit and hinduism there r 2 paths. Iti iti & neti neti ! U have gone in the latter way just by karuna's writings! Mm!
November 28 at 4:32pm · Like
Nirmala Kotravai கோவிலுக்குள் வருவதை தடுக்கும் நீதியை எந்த சட்டம் உருவாக்கியதோ அதே சட்டம் தான் அங்கிருக்கும் கல்லை உடைக்கும் அதிகாரத்தை எங்களுக்கு கொடுத்தது. பாவம் கடவுள் தன்னையே காத்துக்கொள்ள முடியாமல் உங்களைப் போன்ற இந்துக்களை நம்பியிருக்கும் நிலையை என்ன சொல்வது..தொடரட்டும்...வாழ்த்துக்கள்
November 28 at 4:37pm · Like
Nirmala Kotravai ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...இந்து மதம் மட்டுமல்ல...எல்லா மதத்தையும் நாங்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம்...மதம் மட்டுமல்ல...நிறுவனமயமாக்கப்பட்ட எல்லாவற்றையும்....அரசு என்பதும் நிறுவனம்....அது மக்களுக்கான நல்லதை செய்யாது...அதற்கு துணை நிற்பது மதம்...இந்தியாவில்...இந்துத்துவம்...மக்கள் தங்கள் உரிமைகளைப் சமமாகப் பெற ஒன்றிணைக்கப்படவேண்டும்....அப்படி ஒன்றிணைக்கப்படாமல் மதம் துண்டாடுகிறது...மதத்தைக் காப்பாற்றத் துடிக்கும் உங்களுக்கு மனிதர்கள் இரண்டாம் பட்சமாகத் தெரிகிறதா புரியவில்லை....ஏன் ஒருஇந்துவால் இஸ்லாமையும், கிறத்தவத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...நற்குணங்களைபோதிக்கும் கடவுளால் ஏன் தான் ஒருவரே என்று நிரூபிக்க முடியவில்லை...தி.கவினரை, இந்துத்துவ எதிர்ப்பாளர்களை அடிப்போம் என்கிறீர்களே....கோவிலுக்குள் வைத்து சல்லாபம் செய்த சாமியார்...பிரேமானந்தா...இன்னும் இதர ஏமாற்றும் இந்து சாமியார்களை ஏன் அடிக்கவில்லை ..எளிய பொதுமக்களை அடித்துவிடுகிறீர்களே...எல்லா மதமும் இப்படித்தான் கடவுளுக்காக மனிதர்களை கொல்கிறது...மனிதர்கள் மீது நம்பிக்கையற்று....ஏதோ சில காரணங்களைச் சொல்லி அதிகாரத்தை ஏவுகிறது...பெண்களை கீழ்த்தரமாக நடத்துகிறது....மனிதரோடு மனிதராகப் பேசி புரியவைக்க முடியாததை கடவுளின் பெயரால் புரியவைத்துவிடமுடியும் என்பது சாத்தியமில்லை...அது பிரித்தாள மட்டுமே உதவும். ..உங்களுக்கிருப்பது சமூக அக்கறை என்றால் எங்களுக்கிருப்பதும் அதுதானே...நீங்கள் ஒரு வழிமுறையைக் கையாள்கிறீர்கள்...நாங்கள் வேறு வழியில் அதை முன்னெடுக்கிறோம்...எல்லோருக்கும் அதற்கான உரிமை இருக்கிறதல்லவா....உங்கள் வழியில்தான் அது நடக்கவேண்டும் என்பதன் உட்காரணத்தை நீங்களே சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்....
மதங்களை விமர்சித்தால் அடிப்பீர்கள், அரசியல் தலைவர்களை விமர்சித்தால் தொண்டர்கள் அடிப்பார்கள்...அரசை விமர்சித்தால் தூக்கி உள்ளே போடுவார்கள், தேவைபட்டல் என்கவுண்டரில் போட்டுவிடுவார்கள்....விமர்சனமற்ற சமுதாயம் நிச்சயம் முன்னறிவிடும்.... அது அப்படியே இருக்கட்டும்....
November 28 at 6:54pm · Like ·  1
Nirmala Kotravai அதேபோல் மதவாதிகள் வெறும் இந்திய மக்களை மட்டும் கொண்டு பேசுகிறீர்கள், நாங்கள் சர்வதேசிய மக்களையும் கணக்கில் கொள்கிறோம்..24 மணி நேர அடிமைகளாக உழைத்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து 11 மணி கூலி, பின்பு 8 மணி நேர உழைப்பு என மாற்றியது, பெண்களுக்கு ஓட்டுரிமை, சொத்துரிமை, இன்னும் இதர விவசாய மானியங்கள், வாழ்வாதார உரிமைகள் என அணைத்தையும் மக்கள் போராட்டங்களே பெற்றுத்தந்துள்ளன....கடவுளோ, மதவாதிகளோ அல்ல..
November 28 at 7:14pm · Like ·  1
Mathan Soundarapandian நடிகர் சிவகுமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது 
மொழியால் ஒன்றுபட்டவர்களை மதம் பிரித்துவிடுகிறது
November 28 at 7:38pm · Like ·  1
Osai Chella Kotravai, hope u will accept onething. . . Hinduism as a religion too evolved a lot and it is a very very loosely defined notion! Brahminism alone is not hinduism ! For example sidhas !
November 28 at 8:06pm · Like ·  2
Osai Chella They never devided ppl or advocated dogmas! They even condemned the fundamentalists and contributed a lot to healthcare etc.
November 28 at 8:22pm · Like ·  1
Osai Chella One can even see materialists too allowed to coexist as charvakas!
November 28 at 8:28pm · Like
Osai Chella Nagas, hathayogis, tantrics dont bother castes etc.
November 28 at 8:32pm · Like
Nirmala Kotravai Osai Chella I am taking into account the 'major' religions that are into conflicts..ofcourse sidha is materialistic...that is again a part of Tamil Culture.. Buddhist priests also could be similar to that. ..but even that was taken away...the term hinduism was coined by 'brahminism'..before that it was gods of 5 lands..isn't it..& then god's for clan (the saviours & elderly people etc.,)...Brahminism alone is not hinduism..but it took that in its hands..to unite all small sects to become majority so that it could fight against Islam, Christianity, Buddhism, jainism etc., & fearing such results only each religion is holding on to it so tightly that it doesn't want to loose its 'majority' or 'the existing population atleast....
November 28 at 9:07pm · Like ·  1
Osai Chella There was no such thing as hinduism! No word hindu in any scripture ! No country as bharat as per history ! Tamilnadu never a part of any country fm gupthas period & before 10 centuries! Never a part of hindu rashtra!
November 28 at 11:03pm · Like ·  1
Osai Chella All these senas dont have guts to condemn brahminism Which is inhuman ! Can they do it?
November 28 at 11:07pm · Like
Osai Chella They talk swadeshi but has an imported videshi name "HINDU" !
November 28 at 11:10pm · Like
Osai Chella Vishwam ok! HINDU ? Vidhesi Parishad? First let them have their name!
November 28 at 11:14pm · Like
Osai Chella As advani accepted Jinnah a nice liberal non fanatic & educated muslim! to protect their clans fm hindu fanatics as per the ideas of periar he wanted pakistan. So n another word Pakistan is a product of hindu nationalism!
November 28 at 11:22pm · Like
Bharat Voice Sujin @Nirmala 

கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று ஒரு சில சாதியினர் சொன்னால், அதைத்தான் மதமும் சொன்னது என்று கூறிவிட முடியுமா? சரி. நீங்கள் தான் அடுத்தவர்கள் விளக்கத்திற்கு மதிப்பளிக்கமாட்டீர்களே. இஸ்லாமையோ, கிறுத்தவத்தையோ நான் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் எங்களுக்கு எதிராக இருக்கும் பட்டசத்தில் அதை எதிர்ப்பது எங்கள் கடமை. எல்லா மதத்தையும் எதிர்கிறீர்களா? சரி, எத்தனை முறை சர்ச்சுக்கு முன்பும், மசூதிக்கு முன்பும் போராட்டம் நடத்தியிருக்கின்றீர்கள்

@ OSai 

உண்மை. கருணா என்பவரின் அறிவிப்பு, எதோ உதிறிக்கட்சி தலைவர்கள் அறிவிக்கும் அறிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு பொறுப்பான பதவிகளில் இருந்தவர், ஒருதலைப்பட்சமாக அறிவிப்பு வெளியிடுவது, என்னை மட்டுமல்ல சராசரி இந்து இளைஞர்களையும் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கி, மத அரசியலின் தேவையை கற்பிக்கிறது. ஆனால், எந்த அரசு SECULARISM பேசுகிறதோ, எந்த அரசு மதத்தை வேறுப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறதோ, அந்த அரசு தான் இந்து கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹச் பயணத்துக்கு அனுமதி அளிக்கிறது. மத அடிப்படையில் சலுகைகளை அளிக்கிறது. இதை எதிர்த்து எத்தனை பேர் குரல் கொடுக்கின்றனர். நான் மாறியதற்கு என்னும் பல காரணங்கள் இருக்கிறது. ஆனால், அவற்றை வெளிப்படையாக கூறுவது சரியாகாது. நிச்சையமாக, பிராமணர்கள் மட்டுமல்ல பிற உயர் சாதியினரும் அராஜகம் செய்தனர். நானும் "பிறப்பின் அடிப்படை" என்ற முறையில் பிற்படுத்தப்பட்டவன் தான். ஆனால், எல்லாற்றுக்கும் காரணம் மதம் தான் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது ஒரு கருத்திற்கு Like கொடுத்து இருந்தீர்கள். மாத்தி போட்டுவிட்டீர்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும், எனது நன்றிகள்.
November 28 at 11:55pm · Like ·  3
Osai Chella I know some of the dks ways were very harsh and gave negative results! They wrote aiyappa a homosex son etc in walls and wont write harsh on christian healers who speak all unscientific things!
Tuesday at 5:33am · Like
Nirmala Kotravai எங்களுக்கு கூறுணர்வு இருக்கிறது..அந்தந்த மதத்தில் உள்ளவர்களே அம்மதங்களுக்கெதிராக கலகக் குரல் எழுப்ப வேண்டும், அவர்க்ளே போராட்டம் நடத்த வேண்டும்...இல்லையென்றால் மதவாதிகள் மதக்கலவரம் என்று திரித்து அதில் குளிர் காய்ந்து விட மாட்டார்களா. ஒட்டு மொத்தமாக அது மக்கள் விரோத செயலாக இருக்கும்போது (மதச் சண்டைகளுக்கப்பால்) அவற்றைக் கண்டித்தும் மக்கள் இயக்க போராட்டங்கள் நடந்திருக்கின்றன...மேலும் நீங்கள்என்பதில் என்னை தி.க வோடோ இன்னும் இதர கட்சிகளோடு இணைத்து பார்ப்பதை தவிர்க்கவும்...கடவுள் மறுப்பு பேசினால் அவர் தி.கவாகவோ, தி.மு.காவாகவோ இருக்க வேண்டிய அவ்வசியம் இல்லை.
Nirmala Kotravai சாதி வேறு, மதம் வேறு...புதிய கதையாக இருக்கிறது...உங்கள் விளக்கங்களை விட்..அதே ப்ராமணகுலத்தில் பிறந்த வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்...உங்கள் கருத்தை நான் படிக்க மறுப்பதற்கு காரணம் நீங்கள் உங்களை இந்துத்துவவாதிஎன்பதும், அதனால் நிச்சயம் சார்புத்தன்மையோடு தான் இருக்கும் என்பதாலும் தான்.ஏற்கணவே செய்த வரலாற்று திருகல்கல் போதாதா..
Tuesday at 7:31am · Like
Nirmala Kotravai கடவுள், மதத்தை விட்டுவிட்டு பேசுவோம் - சமீபத்தில் 4 இருளர் இனப் பெண்கள் காவலர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், இதற்கு காரணம் காவலர்களா, கடவுளா, சாதியா, பழங்குடிகள் என்பதாலா? வாச்சாதி சம்பவம், ஊராட்சி தலைவர் கிருஷ்னவேணி அறிவாள் வெட்டு நிணைவிருக்கிறதா..
Tuesday at 7:34am · Like
Nirmala Kotravai சமச்சீர் கல்வியின் முடக்கம், இட ஒதுக்கீட்டுக்கெதிராக பிரச்சனை?
Tuesday at 7:34am · Like
Nirmala Kotravai கூலிப் போராட்டம், அடிமை முறை ஒழிப்பை பற்றி கருத்து ஏதும் இல்லையோ
Tuesday at 7:35am · Like
Nirmala Kotravai மேற்சொன்ன பிரச்சனைகளுக்காக அதாவது அருந்தயினப் பெண் மீதான வன்முறை, இருளர் பெண்கள் கற்பழிப்பு இன்னும் இதர மக்கள் உரிமை பிரச்சனைக்காக இந்துஉயர் குடிகள் என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்..ச்(இதி....நான் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தை நம்புவதில்லை)....
Tuesday at 7:42am · Like
Nirmala Kotravai நாத்திகம் பேசினால் அடிப்போம் என்கிறார்களே...கமலஹாசன் என்று ஒரு மேதாவி அரைகுறை குழப்பவாதத்தோடு தசாவதாரம் எனும் படத்தில் கடவுள் மறுப்பு பேசவில்லையா...அவரை விட்டு விட்டு குஷ்புஏதோ சொன்னார், செருப்போடு வந்தார் என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்களே.
Tuesday at 7:42am · Like
Nirmala Kotravai ஆனால் அதே குஷ்பு பிரச்சனையில், ‘தம்ழ்உணர்வுக் கட்சிகளின் அனுகுமுறையைக் கண்டித்து நாங்கள்புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம்...நாங்கள்என்றால் மார்க்சியத்தில், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். எங்களுக்குசுயவிமர்சனம் பிரச்சனையல்ல...அதே நாங்கள் புலி அரசியயும் விமர்சிப்போம், அதற்காக தமிழ் தேசியத்தை அல்ல’...‘தமிழன்எனும் போலி உணர்வுகளையும் விமர்சிப்போம்... போலி மார்க்சியர்களையும் விமர்சிப்போம், உண்மை மார்க்சியர்களின் சில அணுகுமுறையில் தவறிருப்பின் அதையும் விமர்சிப்போம்...அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.
Tuesday at 7:47am · Like ·  1
Nirmala Kotravai தலித் போராளி ஆனந்த் டெல்டும்ப்டே தலித்திய விமர்சனக் கட்டுரையும், ராஜ் கவுத்தமன் என்பார் தலித்திய, மற்றும் கிறித்தவ விமர்சனத்தையும் எழுதியிருக்கிறார்கள், இஸ்லாத்தில் மனுவாதிகள் என்று ஒரு புத்தகம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு...தஸ்லிமா நச்ரீன் எதை விமர்சித்ததால் அடித்து விரட்டப்பட்டார், ஹெச்.ஜி.ரசூல் என்பவர் இஸ்லாத்தை விமர்சித்தால், அவர் ஒதுக்கி வைக்கப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு...இன்னும் எத்தனையோ பேர்அவரவர் வட்டத்தில் கலகக் குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதன்மையாக அவரவர் மதங்கள் அதில் பிறந்தவர்கள் விமர்சனம் செய்வதும், தேவைப்படும் இடங்களில் மாற்று மதங்களின் குறைகளை சுட்டிக்கட்டுவதுமே மத எதிர்ப்பு என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது.
Tuesday at 7:55am · Like
Nirmala Kotravai ஆமாம்! போலி காதலர்களை அடிப்பதாக நியாயப்படுத்தினீர்கள், போலி சாமியாரை, சுருட்டும் கார்ப்பரேட் சாமியார்களை ராம் சேனையோ, கடவுளோ அடித்து நான் பார்க்கவில்லை...நீங்களும் அதற்கு பதில் சொல்லவில்லை
Tuesday at 9:03am · Like ·  1
Osai Chella Nach! The hidutva is mostly blind on their own culprits. They must clear their own cheats too.
Tuesday at 9:39am · Like
Osai Chella He may run away if we ask 4 action taken report. Vaachathi women is not hindus? Uthapuram ppl r not hindus? Perumal temple priest is not hindu? Who fought 4 all saadhi archakars? The above hindutwa advocate show their actions?! He wont or cant!
Tuesday at 9:44am · Like
Jeeva Nanthan Reading all comments and wondering how the main topic has been hijacked quite easily!!!!
Tuesday at 10:45am · Like ·  1
Nirmala Kotravai The sad thing here is that such 'caste minded' people are struck by their faith that they fail to realize that our struggle is for over throwing imperialism and in gaining socialism for all people..in which they are also going to be benefited. caste criticism / atheism is just one step in it...
Tuesday at 10:46am · Like
Nirmala Kotravai Jeeva nanthan a discourse can start from any 'point' and include various connected branches to it...i doubt if focus has been hijacked..its about religion & its oppression..& I have already condemned for what the person in the video spoke..following that when questions are raised in connected topics, it should be answered!!
Tuesday at 10:48am · Like ·  1
Bharat Voice Sujin @ NIRMALA

பிராமண அராஜகம் நிச்சயமாக இருந்தது. ஒரு காலத்தில் அந்த அராஜகம் கொடி கட்டி கோவில் முதல், வீதி வரை பாரவியிருந்து உண்மையே. ஆனால், இன்றளவு பிராமணனை ஒரு வெறுப்புடனும், வில்லனாகவும் சித்தரிப்பது தவறு. இன்று நடக்கும் அனைத்து சாதி சண்டையையும் எடுத்து கணக்கிட்டு பாருங்கள். அவை அனைத்துமே, பிராமணர் அல்லாதோரிட்ட சண்டையாக தான் இருக்கிறது. குறிப்பாக, நீங்கள் யாருக்காக போராடுவதாக கூறுகின்றீர்களோ, இம்மக்கள் தான் தங்களுக்குள் சாதிச் சண்டையிடுகின்றனர். ஆகையால் எல்லாவற்றுக்குமே பிராமணன் தான் காரணம் என்று கூறாதீர்கள். ஒரு காலங்களில் பிராமணர்கள் இருக்கும் தெருவில் கூட பிறர் நுழைய தடையிருந்தது. ஆனால், இன்று எனது பிராமண நண்பர்கள் என்னை அவர்கள் வீட்டிற்கு அழைக்கிறார்கள், அவர்களுடனே நானும் உண்ணுகிறேன். ஒரு சிலர் என்னும் பிராமண வெறியில் இருக்கலாம். அதற்காக எல்லாம் பிராமணன்... பிராமணன்... என்று கூறுவது எந்தளவு சரியாக இருக்கும்? என்னை பொறுத்தவறை, இந்துவிடத்தில் சாதி ஏற்ற தாழ்வு இருக்க கூடாது. யார் தன்னை சாதி ரீதியாக உயர்ந்தவன் என்று கூறினாலும், அது தவறு தான்.

Tuesday at 12:14pm · Like ·  1
Bharat Voice Sujin வாசாந்தி சம்பவம் நம் நீதிமன்றத்தின் ஆமை நடையை காட்டுகிறது. நிச்சயமாக, அங்கு மக்கள் இம்சைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது உண்மை தான். அதே போல, நீங்கள் கூறும் 4 பெண்களை கற்பழிப்பு செய்த போலீசாரை பணி நீக்கம் செய்துள்ளனர் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த கற்பழிப்புகளை சாதிய கண்ணோட்டத்துடன் காண வேண்டியதில்லையே. கற்பழிப்பு சம்பவங்களால் அனைத்து தரப்பு மக்களும் தான் பாதிப்புக்குளாகின்றனர். வாசாந்தி கூட பழிவாங்கும் விதத்தில் தான் நடந்ததே தவிர, அவர்கள் மலைவாழ் மக்கள் என்ற வெறுப்புணர்ச்சியால் என்பதால் இல்லை. இந்த விஷ்யங்களை பொறுத்தவரையில், இவற்றை குற்றம் என்ற முறையில் தான் அனுகவேண்டுமே தவிற, சாதிய கண்ணோட்டத்தில் அனுகுவது தவறு தான். இப்படி நீங்கள் அனுகுவது கூட சாதியை வளர்ப்பது போலத் தான்.
Tuesday at 12:15pm · Like ·  1
Bharat Voice Sujin கூலி வேலை என்பது தாழ்த்தபட்ட மக்களுக்கான வேலை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. வறுமையின் கோரபிடியில் சிக்கினால், உயர் சாதியினர் கூட துப்புரவு பணி செய்ய வருவான். என்னை பொறுத்தவரையில் எந்த தொழிலும் உயர்ந்த தொழில் தான். பொருராதார கண்ணோட்டத்தில் வேண்டுமானால், சில வேலைகள் குறைவாக தெரியலாமே தவிற, தர்ம நெறி கொண்ட எந்த தொழிலுமே இழி தொழிலில்லை. ஆனால் இதே சமயம், இன்று பொருமளவில் துப்புரவு பணியாளராக பணியாற்றுவது ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான். அவர்களின் வாழ்கை முறையை நான் பார்த்திருக்கிறேன். பெரியவர்களுக்கு படிப்பறிவு இல்லை. குழந்தைகளும் சராசரியாக 8ஆம் வகுப்பு தான் படிக்கின்றனர். சுகாதாரம் இல்லை. அதை அரசு நினைத்தால் மாற்றலாம். அவர்களுக்கு நல்ல ஒரு கல்வி கொடுத்தாலே, அவர்களின் அடுத்த தலைமுறை நன்றாக வாழும் என்பது என் கருத்து. 
அதே போல, ஆணுக்கு ஒரு கூலி, பெண்ணுக்கு ஒரு கூலி என்பதை ஏற்க முடியாது. ஒரு ஆணை காட்டிலும், ஒரு பெண் குறைவாக வேலை செய்யலாம். ஆனால், வேலை செய்யும் போது, அந்த பெண்ணின் உடல் சக்தி செலவும், ஆணின் உடல் சக்தி செலவும் சமமாகவே செலவாகிறது. அதனால், ஊதிய கொடுப்பதில் வித்தியாசம் பார்பது தவறு தான். 

நீங்கள் பெரியாரை முன்வைத்து பேசியதால், நான் உங்களை திக என்றுதான் தவறாக எண்ணினேன். 

தெரியுமா என்று கட்டுரைகளையும், புத்தகங்களையும் கூறினீர்கள். ஆனால், இந்துக்கள் விஷ்யத்திலும் கட்டுரையும், புத்தகங்களும் தான் எழுதுகின்றீர்களா? தெரு முனை பிரச்சாரக்கூட்டம் என்று எத்தனை இந்து கோவில் முன் பிரச்சாரம் போட்டு, இந்து தெய்வங்களை இழிவுபடுத்துகின்றனர். அது போலவே, மசூதிக்கு முன்பும், சர்ச்சுக்கு முன்பும் கூடி எத்தனை பேர் நாத்தீக பிரச்சாரம் செய்கிறார்கள்? எத்தனை பேர் அவர்களின் மத நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர்?
Tuesday at 12:16pm · Like ·  1
Bharat Voice Sujin கமலை எதிர்க்கவில்லை என்று கூறுவது தவறு. தசவாதார படத்தை எதிர்த்து கூட பல போராட்டங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான மன்மதன் அம்பு படத்தை எதிர்த்து கூட பல போராட்டங்கள் நடந்துள்ளது. அதன் விளைவாக, ஒரு சில வரிகள் கூட மாற்றப்பட்டது.

@ Osai 
நான் மறுபடியும் கூறுகிறேன், ஒட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இங்கு விவாதம் நடத்துவதற்காக எனக்கு பரிசும் கிடைக்க போவதில்லை, தண்டனையும் கிடைக்க போவதில்லை. அப்படியிருக்க நான் ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லையே. என் கருத்தை கூற யாருக்கு பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை. Free timeயில் தான் நான் FACEBOOKகை உபயோகிக்கிறேன். நான் இப்போது எழுதியுள்ள கருத்துக்கு மாற்று கருத்து எழுதுவீர்கள், அதற்கான எனது கருத்தை, அடுத்த time facebookகை உபயோகபடுத்தும் போது எழுதுவேன். ஓடிவிட மாட்டேன். அதற்காக நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
Tuesday at 12:17pm · Like ·  1
Osai Chella U never answered? How many time u protested for untouchability? Where and when?
Tuesday at 1:11pm · Like
Osai Chella Very simple question! Dk can show! Even cong can show! Even communists can show! Dalit can show? What about yours?
Tuesday at 1:16pm · Like
Osai Chella Dont beat around the bushes! Simple where, when and how many will be enough!
Tuesday at 1:17pm · Like
Osai Chella Where and when u protested against allparty equal archaka rights since ur ideology is against brahminism? Pls give atleast a few details!
Tuesday at 1:22pm · Unlike ·  1
Nirmala Kotravai Bharat Voice Sujin:முழுமையாக படித்துவிட்டு வினை புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் சாதீய புரிதல், அரசியல் பார்வை பொது புத்திஎன்று சொல்லக்கூடிய ‘generalised view’ வகையில் இருப்பதால் பார்ப்பனிய எதிர்ப்பை ப்ராம்ணர்கள் மீதான எதிர்ப்பாக மட்டுமே புரிந்து கொள்கிறீர்கள். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் வர்க்க படிநிலைகளை சாதீயமாக மாற்றிய வரலாற்றெதிர்ப்பு. இப்போதைய தலைமுறையினர் அதற்கு காரணமில்லை என்றாலும், அவ்வமைப்பு இன்றளவில் வேறு அரசியல் வடிவத்தில் தொடர்கிறது. அதுவே பழங்குடியினர் ஒடுக்கப்படுவது, உத்தப்புரம் சுவர், கீழவெண்மனி எரிப்பு என்று நீள்கிறது . கப் பஞ்சாயத்து, இரட்டைக் குவளை முறையெல்லாம் இன்றும் தொடர்கிறது. பௌதிகத் தீண்டாமைத் தானாக மாறவில்லை, அது வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒடுக்கபப்ட்டது, அதற்குப்பின் இருக்கும் போராட்ட வரலாறு மிகப்பெரியது, குரூரமானது. தீண்டாமை என்பது வெறும் பௌதிகமானது அல்ல நண்பரே, அது வேறு வடிவம் பெற்றுவிட்டது. இதற்கெல்லாம் அடித்தளமிட்டது பார்ப்பனியம். (அதில் அக்காலத்தைய பார்ப்பனியர் புள்ளி வைத்தனர், ஆதிக்க சாதியினர் கோலம் போட்டனர் என்று எளிமைப் படுத்தி சொல்லலாம். அதுவே சைவம், வைணவம் என்று முட்டிக் கொள்கிறது..அதிலும் எத்தனை உட்பிரிவுகள்..இதில் நாம் அன்பை, சுய ஒழுக்கத்தை போதிக்கும் பௌதத்தை இழந்ததுதான் மிச்சம்).

யாருக்காக போராடுகிறோமோ அவர்களே அடித்துக் கொள்வது உன்மைதான், அதனால் தான் அதன் வேர்களை திருத்தியமைக்க முயல்கிறோம். சாதீயம் எல்லாத்துக்கும் காரணமில்லை என்பது தட்டையான பார்வை. நீங்கள் உங்களை அல்லது உங்களைப் போன்ற ஒரு சில ஜனநாயகவாதிகளை வைத்து தயவு செய்து அமைப்பை எடை போடாதீர்கள். மதவாத அரசியலமைப்பு மக்களுக்கன நீதியை பெற்றுத்தராது. கடவுள் இருக்கிறார இல்லையா என்பதோ, மதமோ இல்லை பிரச்சனை மதவாதமும், மதவாதிகளும்தான் பிரச்சனை..மதம் எதற்கு பயன்படுக்கிறது என்பது கேள்வி....கொஞ்சம் மறுபக்கம் யோசிங்க நண்பரே.
Tuesday at 1:41pm · Like ·  1
Nirmala Kotravai நான் சில கற்பழிப்பு சம்பவங்களைப் பேசியது கடவுள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்என்ற பொருளில். நிச்சயம் இக்குற்றங்களில் சாதியம் ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் அப்பெண்களிடம் சென்று உரையாடினால் புரியும். இல்லாத கடவுளை நம்பும் நீங்கள் பாதிக்கபப்ட்ட மக்களிடம் சென்று பேசிப்பாருங்கள்..நான் சாதியை வளர்க்கவில்லை தோழரே, சாதியத்தின் கூறுகளை விமர்சிக்கிறேன்.
Tuesday at 1:41pm · Like
Nirmala Kotravai கூலி உழைப்பு, அடிமை முறை பற்றிய என் கேள்வி இந்தியச் சூழலுக்கானது மட்டும் அல்ல..சர்வதேசிய அளவில் எல்லா உரிமைகளையும் மக்கள் போராட்டங்களால், குறிப்பாக மார்க்சிய வழிகாட்டுதலோடு நடந்த போராட்டங்கள் வென்று தந்திருக்கின்றன..8 மணி நேர கூலி முறைக்கு காரல் மார்க்ஸின் பங்களிப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுள் பெற்றுத்தரவில்லை என்பதில் எல்லா மதக் கடவுளையும்தான் சொல்கிறேன். உங்களின் மதப்பற்று இந்து இந்தியாவைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறதோ என எனக்கு வருத்தமாக இருக்கிறது சகோதரா. 
உங்கள் விளகக்ங்கள் உங்களவில் நீங்கள் நியாயமானவர் என்பதை எடுத்துரைக்கத் தவறவில்லை, எங்களுக்கு பிரச்சனை சமூக அமைப்பு, நிறுவனம், எதேச்சதிகாரம்நான் எங்கும் சென்று போராடவில்லை..ஆனால் எல்லாவற்றையும் பாரபட்சமின்றி விமர்சித்து எழுதியுள்ளேன். (http:// saavinudhadugal.blogspot.com)
கமலை எதிர்த்ததில் மகிழ்ச்சி
Tuesday at 1:41pm · Like
Nirmala Kotravai இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை என் புரிதலும் இப்படித்தான் இருந்தது. சுயவிபரம் அனாவசியமென்று பேசவில்லை. ஒரு சிறு குறிப்பைக் கொடுக்கிறேன். என் தாய்மொழி கொங்கனி அதாவது சாரஸ்வத கௌட மரபு அதாவது பாப்பாத்தி. அங்கப் பிரதஸ்னம், அடிப் பிரதஸ்னம், கோவில், மடம், சாமி என்று தான் மூழ்கியிருந்தேன். என் சுய அனுபவத்திலிருந்தே கடவுள் இல்லை என்பதை உணர்ந்தேன். பெரியாரெல்லம் எனக்கு அப்போது தெரியாது. கடவுள், ஒழுக்கம், கற்பு என்றெல்லம் அச்சுறுத்திவந்த மதம் எனக்கு எந்த அறிவையும் வளர்க்க உதவவில்லை, இன்னும் சொல்லப்போனால் சமூகப் பொறுப்புணர்வோ, சுயஒழுக்கத்தையோ கூட அது போதிக்கவில்லை. ஏனென்றால் கடவுளர்கள் எத்தனை மனைவிகள் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியுமே. மதம் வெறும் பற்றுணர்வை போதிக்கிறது அப்பற்றுணர்வு, மற்றவரை எதிரியாக்கிவிடுகிறது அவ்வளவே.
Tuesday at 1:43pm · Like
Nirmala Kotravai சாதி, தீண்டாமை, பார்ப்பனியம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் என்று எதுவும் தெரியாது எனக்கு. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் பௌத்தம் என்ற சமத்துவக் கொள்கை புத்தகங்களை படிக்கத் துவங்கினேன், அதுவும் தாய் தெய்வ வழிப்பாடு பற்றி ஒரு ஆய்வின்போது தந்தைக் கடவுள்என்ற அமைப்பு சமூகத்தில் எத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியுள்ளது என்று கண்டேன், அது தொடர்பாக எனது நண்பனிடம் உரையாடியபோது அவன் எனக்கு மாற்று சிந்தனைகளை அறிமுகம் செய்து வைத்தான், அவனே எனது வாழ்க்கைத் துணை. என் சுய சாதி துரோகமும் என் அறிவுத்தேடலிலிருந்தே தொடங்கியது, எனக்கிதில் ஒரு வருத்தமும் இல்லை..மனுசங்கள மிஞ்சி என்ன சாதி, என்ன கடவுள்? கடவுள் நம்பிக்கையிருந்தபோது இல்லாத சமூக உணர்வை மார்க்சியம் போதித்ததெனக்கு, அதே போல் பெரியார், அம்பேத்கர், இனும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று உண்மைகள். அவ்வுணர்விலிருந்து கடவுள் எதிர்ப்பை பேசினாலோ, சமத்துவம் பேசினாலோ, பெண் விடுதலைச் சிந்தனை பேசினால் அப்பெண்ணை வேசிஎன்கிறது மதவாதம். 

இதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை..சொந்த அனுபவத்தில் உணர்ந்த ஒன்றை பிரசாரம் செய்தால் அதற்கு மதவாதிகள் மிரட்டுவார்கள், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக கடவுள் இருக்கிறார் என்று பேசிக்கொண்டிருப்பவர்களை நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டும்..நல்ல நியாயம். ஜனநாயகம் என்பதன் பொருள் எல்லோருக்கும் எல்லா கருத்தையும் பேசும் உரிமை இருக்கிறது, அதில் சரி தவறை ஆய்ந்து ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் இருக்கிறது. ஆனால் அப்படி மக்களை சிந்திக்க விடாமல் முடக்குவது பற்றுணர்வு, மதம் என்பது அத்தகைய பற்றுணர்வை வளர்த்துவிடுகிறது. இதை பாரபட்சமில்லாமல் எல்லா மதமும் செய்கிறது. 

உங்கள் பொறுமையான பதில்களுக்கு நன்றி..விவாதத்தை சிறு சிறு புள்ளிகளாக தொடர்வது சிரமமாக இருக்கிறது..களத்திலோ, நேரிலோ சந்திக்கும் வாய்பிருந்தால் உரையாடுவோம்.. உங்களுக்கும் அந்தப்பக்கம் ஏதோ குரல் கேட்கிறதே அது என்ன என்று காது கொடுத்துக் கேட்போம் என்றிருந்தால் தெரிவியுங்கள், சில புத்தகங்களை தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். நன்றிவணக்கம்.
Tuesday at 1:44pm · Like ·  1
Osai Chella Yes ! I too wait for his response and numbers ! He seems to be an intellectual person though on the other side.
Tuesday at 1:57pm · Unlike ·  2
Balraj Srinivasan I have been very much into this from the very beginning ,reading , observing, thinking a lot, fighting within myself on various aspects deliberated.....well i would say at one point of time, everybody is attracted or to say.. their affinity to one thing they stick to is because they find it suits much better to themselves...but beyond all of these being followed or liked by various humanbeings on varied aspects is just for what they like for themselves and decide as the best to cope up with this harsh real life....i too would like to have a society free of caste, creed, gender bias, regional bias because of birth,equality ..and much more which is regarded as the best for this human race to live as Real Humanbeings....But Alas centuries have brougt in change every now and then in various forms But all only THRU this living (or those who left us)human lives...........Well i do wish That Sister Nirmala Kotravai's agony on inequalities perish soon But as a saying says CHANGE IS THAT WHICH CAN NEVER BE CHANGED...Nothing can stop change and let us hope we as humans change for the betterment of ourselves( had it been a couple of days back i would have expressed as ...by the grace of the Almighty let us change...But now why do we need an Almighty who is different for each and everyone ) Let's reengineer our souls to accept the human race as it
Tuesday at 2:24pm · Like ·  1
Balraj Srinivasan ....... human race as it is and make way for souls to change...which is also YET ANOTHER CHANGE.
Tuesday at 2:32pm · Like ·  1
Nirmala Kotravai thanks Mr. Balraj Srinivasan
Tuesday at 3:10pm · Like ·  2
Bharat Voice Sujin @Nirmala 
எனது சாதிய புரிதல், அரசியல் சார்ந்தது என்று கூறுகின்றீர்கள். இது தவறு. இந்து மதம் கூறியதின் அடிப்படையில், தான் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறேன். இதன் கருத்துக்களைத் தான், நான் உங்களுக்கு LINK மூலம் அளித்தேன். அதே போல, "இந்து பாரதம்" என்பதில் தான் இருக்கிறேன் என்று கூறினீர்கள். இது முற்றிலும் சரியே. நான் என் நாட்டின் அரசியலில் தான் கவனம் செலுத்துகிறேன். என் மக்கள் மறந்த அல்லது திரித்த தர்ம நெறிமுறைகளை மீண்டும் கொண்டு வந்து, இந்துக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கவே நான் செயல்படுகிறேன். நான் என்னை வைத்தோ, என் வாழ்கையில் நடந்த சம்பவங்களை வைத்தோ யாரையும் எடை போடவில்லை. பார்பனன் என்று பெரியாரிஸ்ட்டுகள் கூறினாலும், அவர்கள் பிராமணர்களைத் தான் அதிகமாக எதிர்த்து, வெறுத்துள்ளனர் என்பது தான் உண்மை. என்னை பொறுத்த வரை, பிராமணனும் இந்து மதத்தவன் தான், பிற மக்களும் அது யாராக இருந்தாலும் சரி, அவர்களும் இந்து மதத்தவர் தான். இவர்களிடம் ஏற்ற தாழ்வு இருப்பது தவறு. அதே போல, பெரியார் கையாண்ட சாதி ஒழிப்பும் ஒரு சாதி வளர்ப்பாகத் தான் தோன்றுகிறது. எப்படி பிராமண சாதி என்று கையாண்ட சாதி ஒழிப்பும் ஒரு சாதி வளர்ப்பாகத் தான் தோன்றுகிறது. எப்படி பிராமண சாதி என்று உயர்த்திபிடிப்பது தவறோ, அதே போல தலித் என்றோ தாழ்த்தப்பட்டவர் என்றோ உயர்த்திபிடிப்பதும், ஒரு சாராரை மட்டும் வெறுத்து தள்ளுவதும் தவறு தான். சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில், SC/ST மக்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. அதனால், அவர் அம்மக்களின் தரத்தை உயர்த்த சில சலுகைகளை அம்பேத்கர் பெற்று தந்தார். அதற்காக, அவர் சாதி தலைவர் ஆகமாட்டார் என்பதையும் இங்கு தெளிவுபடுத்துகிறேன். ஆனால், இன்று நடப்பது என்ன? பல சாதிக்கட்சிகளின் மானசீக தலைவராக இருப்பது அம்பேத்கர் தான். இது தான் என் சாதிய புரிதலுக்கும், தங்கைப்போன்றவர்களின் சாதிய புரிதலுக்குமுள்ள வித்தியாசம். கம்யூணிசத்தை பற்றி கூறினீர்கள். அதனால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். கோட்சே, காந்தியை கொன்றதையும், அதை சரி என்று நியாயப்படுத்துவதும் தவறு என்று கூறினீர்கள். புரட்சியன் போது, மாவோ, ஸ்டாலின் போன்றவர்கள் எத்தனை பேர்களை கொன்றார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமே? அதை என்ன சொல்வீர்கள்? மதம் என்பது பாரதத்தில் வேரூன்றியிருக்கிறது. உலகில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் ஆன்மீகம் அழியலாம். ஆனால், பாரத தேசத்தில் இது சாத்தியமல்ல. தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட கோயிலுக்குள் நாங்கள் செல்வோம் என்றார்களே தவிர, எங்களை ஏற்றாத கோவில் எங்களுக்கு தேவையில்லை என்று கூறவில்லை. இதை அறிந்ததால் தான் அண்ணா கூட, தன் நாத்தீகங்களை ஒதுக்கி கொண்டு, ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றார். ஆகையால், இந்த ஆன்மீக வேர்களை யாராலும் அறுத்துவிட முடியாது. சர்வதேச அரசியல் என்று கூறினீர்கள் அது சாத்தியம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் என் கருத்தை முன்வைத்தாலும், நீங்கள் நிச்சயமாக நம்ப போவதில்லை. அதனால் அதனுள் செல்ல விரும்பவில்லை. நான் கூறுவது இதைத்தான், என் மதம் மக்களை தர்ம நியதிப்படி வாழ சொல்கிறது. ஆதலால், மதத்தால் ஒன்றும் தவறு நிகழப்போவதில்லை. நாகரீகமான முறையில் விவாதிப்பதற்கு மிக்க நன்றி.
Tuesday at 11:19pm · Like
Bharat Voice Sujin @ Osai 
வன வாசி கல்யாண் பற்றியோ, அல்லது அரசு செல்ல முடியாத மலைகளில் கூட கல்வி அளிக்கும் ஏக்கல் வித்யாலையா பற்றி கேள்விபட்டதில்லையா? உத்தபுரத்தின் இறுதி பேச்சு வார்த்தையை யார் முன்நின்று நடத்தினார்கள் என்பதைப் நீங்கள் பார்க்கவில்லையா? நான் ஏற்கனவே கூறிய, சுவாமி லட்சுமாணந்த ஒரிசாவில் என்ன செய்தார் என்று தெரியாதா?
Tuesday at 11:23pm · Like
Osai Chella Sujin i know vanavaasi and wanted to know when did u fought for all saadhi archakaas and caste brahminism ! Pls answer!
Tuesday at 11:56pm · Unlike ·  1
Nirmala Kotravai @Bharat: காந்தியை கொண்றது தவறு என்று நான் சொல்லவில்லை..யார் அவரைக் கொன்றது என்று கேட்டது இந்துத்துவவெறியை சுட்டிக்காட்ட...உலக்ப் போர்கள்ளில் சர்வாதிகார அரசு போர் தொடுக்கும் போது, மக்களை சுரண்டும் போது, அதற்கெதிராக கடவுள் வருவார் காப்பாற்றுவார் என்று வாயை மூடிக் கொண்டு சும்ம இருக்க முடியாது..அதே வேளை அத்தலைவர்களின் செயல்முறைகளைல் தவறுகள் என்ன இருந்தது என்ற விமர்சனப் பார்வையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..மாவோ, ஸ்டாலின் முதல் இன்றைய ஹூகோ சாவேஸ் வரை விமர்சிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றை விமர்சிப்பதால் அது எதிர்க்கப்படுகிறது என்பது சிறுபிள்ளைத்தனம்.
Wednesday at 8:11am · Like ·  1
Nirmala Kotravai பெரியாரிஸ்டுகள் ப்ராமணர்களை அதிகம் வெறுத்தாலும் r.s.s. போல் மனிதர்களை அடித்துப்போடவில்லையே....யார் விதைத்தார்களோ அவர்கள் அறுவடை செய்யவும் வேண்டும்.
Wednesday at 8:13am · Like
Nirmala Kotravai தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களின் கோயில் பிரவேசம் என்பது உரிமையை மீட்டெடுக்கும் போராட்டம்..அதற்காக அவர்கள் கடவுளை ஏற்றுக்கொண்டார்கள் என்பதில்லை...அம்பேத்கர் அதற்காகத்தான் பௌத்தத்திற்கு மாறினார், மாறச்சொன்னார்...ஆனால் பௌத்தம் காமத்திற்கெதிறான ஒன்றாக இருப்பதால் இந்தியச் சூழலில் அது தோல்வியைக் கண்டது...என்றும் சொல்லலாம்.மேலும் இடஒதுக்கீடுஎன்பதில் அம்மதம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை...அதை மதம் என்று சொல்வதே கூட புத்தருக்கு செய்யும் துரோகம்.
Wednesday at 8:16am · Like ·  1
Nirmala Kotravai ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றுதான் எல்லா மதமும் சொல்கிறது அது எந்த தெய்வம் என்பதில் தான பிரச்சனை...மேலும் ஒருவள்இல்லாமல் ஒருவன் எப்படி பிறந்திருப்பான்...அண்ணா சொன்னாலும் சரி, பெரியார் சொன்னாலும் சரி அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லையே..பகுத்தறியும் அறிவைப் பயன்படுத்தலாமே....ஒருவரின் எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நிர்பந்த்ம் ஏதும் இல்லை...
Wednesday at 8:19am · Like
Nirmala Kotravai விளக்கம்: /எனது சாதிய புரிதல், அரசியல் சார்ந்தது என்று கூறுகின்றீர்கள். இது தவறு// - நான் அப்படி சொல்லவில்லை, உங்கள் புரிதல் பொது புத்தி சார்ந்திருக்கிறது அதாவது 'generalized view'
Wednesday at 8:29am · Like
Nirmala Kotravai அம்பபேத்கரை சாதித் தலைவராக பிடிக்கிறார்களா...நகைச்சுவை.....கடவுளால் முடியாததை...அவர்தான் அம்மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்...அவரை மீட்பராக காண்கிறார்கள்...போகட்டும் விடுகங்கள்.....ஆன்மீக வேர்களை யாரும் அழிக்க முடியாது உன்மை...உங்கள் ஆன்மீக மொழியில் சொன்னால் எல்லாம் துவங்கிய இடத்தில் தானே முடியும்....அது அவ்வாறே ஆகுக......மீண்டும் சொல்கிறேன்...கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்ளாமல் மக்களை ஏவிவிடுவதில் இருந்தே தெரியவில்லையா எவ்வளவு சக்தி வாய்ந்த்வர் அவர் என்று..உங்கள் கடவுளை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்...நாங்கள் மக்களைப் பார்த்துக்கொள்கிறோம...நீ்ங்களும் மக்களுக்ககத்தான் போராடுகிறீர்கள் என்று சொல்வீர்களானால் அந்த கடவுள் உங்களை நம்புவாராக....
Wednesday at 9:00am · Like ·  1
Nirmala Kotravai இறுதியாக, கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வதையும், அதற்கான கதைகளையும் நாங்கள் கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்பது எத்தகைய வன்முறை...அப்படி அவர் இருக்கிறார் என்றால் என் போன்றவர்களை அவரே பார்த்துக்கொள்வார், திருத்துவார் என்று விட்டுவிடாமல் எது எங்களை எதிர்கொள்ளச் செய்கிறது என்பதை மதவாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்...மதம் எதற்காக தேவைப்படுகிறது என்பது இதிலிருந்தே விளங்கவில்லையா...தாயாகிய பெண்ணை, மனைவியாகியப் பெண்ணை பலகீனமானவள், கீழ்த்தரமானவள் என்று சொல்லும் (கடவுளுக்காக) மதவாதிகளுக்காக உங்களைப்போன்ற ஆண்கள் விசுவாசமாய் இருப்பதே அம்முளை சலவையின் வெற்றி...
Wednesday at 9:05am · Like
Nirmala Kotravai தான் படைத்த மக்களே அவரை நம்பாதபோது அவரிடம் என்ன குறை இருக்கிறது என்று கடவுள் தான் சியபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்...
Wednesday at 9:05am · Like ·  2
Osai Chella :-) pakuthundu "pal uyir" omputhal noolor thokuthavatru ellaam thalai". We must accept and understand unharming plurality of thoughts, cultures, ideologies and diversities. Black and white are producing much more greys than their sum ! My learnings fm nature! Thanks 2 all for sharing their views. Let us move on! Bye 4 now!
Wednesday at 9:13am · Unlike ·  1
Osai Chella Maatraan thottathu mallikaikal mananthatharkum nandrikal :-) . I will archive this long thread later as an aavanam. Thank u all 4 ur time and energy and knowledge sharing !
Wednesday at 9:19am · Unlike ·  2
Bharat Voice Sujin @Nirmala

நீங்கள் உங்கள் கொள்கைப்படி மாவோ செய்தது தவறில்லை என்பது போல கூறுகின்றீர்கள். நான் என் கொள்கையின் படி கோட்சே செய்தது தவறில்லை என்கிறேன். அதே சமயம், இது இரண்டுமே காந்தியவாதிகள் கண்ணோட்டத்தில் தவறாக தெரியும். இவை அனைத்துமே கொள்கை தான் சரி, தவறு என்கிறது. கடவுள் பற்றிய விவாதத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை. நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், கண்ணை மூட மாட்டோம், காதை மூட மாட்டோம் என்பீர்கள். ஆதலால், அதைப்பற்றி கூற விரும்பவில்லை. 

கோவில் பிரவேசம் செய்து மக்கள் செல்கின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், உள்ளே சென்று, சாமியை இருகை கூப்பி பக்தி பரவசத்துடன் கும்பிட வேண்டிய அவசியமில்லையே? பிரசாதத்தை வாங்க வேண்டிய அவசியமில்லை? அடுத்த நாள் முதல் அங்கு செல்லவேண்டிய அவசியமுமில்லையே? ஆனால், இவை அனைத்தும் நடக்கிறதே. மக்கள் நடத்துவது உரிமை போராட்டம் தான். அது ஆன்மீக உரிமை போராட்டம் தான். RSS என்றீர்கள். கோட்சே விஷ்யத்தில் RSSயை முன்நிறுத்துவது தவறான வாதம். காந்தி கொலை செய்யப்பட்டதும், சில தொண்டர்கள் இனிப்பு வழங்கி சில இடங்களில் கொண்டாடினார்கள். ஆனால், கொலைக்கு பொறுப்பு RSS என்பது தவறான வாதம். அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற கோசத்தை தத்துவ ரீதியாக நான் முன் வைக்கவில்லை. முழுமையான நாத்தீக கொள்கையால் யாராலும் இங்கு அரசியலும் செய்ய முடியாது, ஆட்சியும் நடத்திவிட முடியாது என்பதை குறிக்கத்தான் அதை நான் கூறினேன். மார்கசிஸ்ட் கட்சி கூட தன் நாத்தீக கொள்கை மாற்றலாமா என்று கட்சி தலைமை விவாதிப்பதாக செய்திகள் வெளியாவதையும் இங்கு குறிப்பிடுகிறேன். அம்பேத்கர் விஷ்யத்தில் நான் கூறியது நகைச்சுவையல்ல, உண்மை. அம்பேத்கர் மட்டுமல்ல காமராஜர், கக்கன், VOC போன்ற பலரும் இன்று சாதிக்குள் தான் அடைக்கப்பட்டுள்ளனர். 
மறுமுறையும் இங்கு நான் ஒன்றை கூறுகிறன், ஆன்மீகம் என்பது பாரதத்தில் வேரூன்றி இருக்கிறது. அதை யாராலும் அசைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது. Non muslim tax அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த சட்டம் பல முறை அமலில் இருந்த சமயத்திலும் கூட எங்கள் மதத்தை யாராலும் அழித்துவிட முடியவில்லை. இனியம் அதை யாராலும் அழிக்க முடியாது. 

@Osai
வன வாசி கல்யாண் பற்றி தெரியும் என்றீர்கள். அப்படி என்றால், இந்த கேள்வியை நீங்கள் மறுபடியும் கேட்டிருக்க மாட்டீர்களே. சரி. தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்து தர்ம வித்யா பீடம் கூட சாதி ஏற்ற தாழ்வை நீக்கவும், இந்து ஒற்றுமையை நிலை நாட்டவும் தான் செயல்படுகிறது.
Wednesday at 4:48pm · Like
Nirmala Kotravai bharat உங்கள் ஒப்புமையில் உள்ள தவறை சுட்டிக்காட்டுவதோடு விளக்கங்களுக்கான கட்டுடைப்பையும் என்னால் கொடுக்க முடியும். செல்லா அவர்கள் இதிலிருந்து நகர்வோம் என்று சொல்லியிருப்பதால் அதற்கு மதிப்பளித்து விலகிக் கொள்கிறேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் தொடர்வோம். நன்றி....
12 hours ago · Like ·  1
Osai Chella Oh! But as a webgypsy i wont say it is over 4 ever nirmala ! If u both continue i wont mind ! Just because it is happening in my wall is not mine! My posts are open and u can add always if u want to do so!
10 hours ago · Like
Osai Chella I see arguements and discussions as collective writings of that particular topic and hence pls take ur own decisions.
10 hours ago · Like
Nirmala Kotravai நன்றி செல்லா...

** இன்று இவ்வுரையாடலை வாசித்துப் பார்க்கையில்  எனது பின்னூட்டங்களில் சில வாக்கியங்களை, கேள்விகளை உடைத்து உடைத்து கேள்வி எழுந்ததால்..உடைது உடைத்து பதில் சொன்னதில் //காந்தியை கொண்றது தவறு என்று நான் சொல்லவில்லை..// என்ற எனது பதில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும் வாய்ப்பிருப்பதாக கருதுவதால் சிறு விளக்கம்: காந்தியை மட்டுமல்ல யாரைக் கொன்றாலும் அது தவறுதான்...இவ்வுரையாடல் ஹிந்துத்துவ வெறி காந்தியை கொல்லும் அளவுக்கு துணிந்தது என்ற பொருளில் யார் அவரைக் கொன்றது எனும் கேள்வியை எழுப்பியுள்ளேன்....மதவாத அழித்தொழிப்புக்களுக்கு, வாழ்வுரிமைக்கான வெகுஜன புரட்சிக்கும் வேறுபாடுள்ளது, ஆனால் மதவாதத்திற்கு நியாயம் கற்பிக்க திரு. பாரத் சுஜின் அவர்களால் இங்கு அவை ஒப்பு நோக்கப்பட்டுள்ளது... 

No comments:

Post a Comment